நெருக்கடியான நிலையில் பொய்வதந்திகளைத் தவிருங்கள்: கொத்மலை அணை வதந்தி பரப்பியவரை தேட உத்தரவு – ஜனாதிபதி

Published By: Vishnu

03 Dec, 2025 | 03:27 AM
image

(இராஜதுரை ஹஷான்)

கொத்மலை நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைந்து விட்டதாக வதந்தியை பரப்பிய நபரை தேடுமாறு பொலிஸ்மா அதிபர் மற்றும் புலனாய்வு பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளேன். நெருக்கடியான நிலையின் போது போலியான விடயங்கள் மற்றும் செய்திகளை பரப்புவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே தற்போதைய நிலையில் சிறந்ததாக அமையும். அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி நாட்டு மக்களிடம் வலியுறுத்தினார்.

மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. பாதுகாப்பற்ற மற்றும் அச்சுறுத்தலான பகுதிகளில் வாழ்பவர்களை பலவந்தமான முறையில் வெளியேற்றுமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.அதற்குரிய சட்டமும் தற்போது அமுலில் உள்ளது. நாட்டு மக்கள் தற்போதைய நிலைமையை விளங்கிக் கொள்ள வேண்டும்.அச்சுறுத்தலான நிலையில் வாழ்பவர்களுக்கு பாதுகாப்பான குடியிறுப்பு நிர்மாணித்துக் கொடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து மாகாண ஆளுநர்கள் மற்றும் மாகாண பிரதான செயலாளர்களுடன் நேற்று நிகழ்நிலை முறைமை ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர்  மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையானது வரலாற்றில் மிக மோசமான இயற்கை அனர்த்தத்தை தற்போது எதிர்க்கொண்டுள்ளது.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை இன்றளவில் உறுதியாக கணக்கிட முடியாத இக்கட்டான நிலை காணப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் குடியிறுப்புக்களை அமைத்துக் கொண்டமை இவ்வாறான அனர்த்தங்களின் போது உயிரிழப்புக்கள் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

பாதுகாப்பற்ற மற்றும் அச்சுறுத்தல் நிலையில் உள்ள பகுதிகளில் குடியிறுப்புக்களை அமைத்துள்ளவர்களை கருத்திற் கொண்டு 2025 ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டது. அவதானத்துக்குரிய பகுதியில் உள்ள 15 ஆயிரம் வீடுகள் அடையாளப்படுத்தப்பட்டு அவற்றில் அதி அவதான நிலையில் உள்ள 5000 குடியிறுப்புக்களை அப்பகுதியில் இருந்து அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.இருப்பினும் அப்பகுதியில் வாழ்பவர்கள் அதற்கு இடளிக்கவில்லை.

பாதுகாப்பற்ற மற்றும் அச்சுறுத்தலான பகுதிகளில் வாழும் குடியிறுப்புக்களை அடையாளப்படுத்துங்கள். அவர்களுக்கு பாதுகாப்பான பகுதிகளில் குடியிறுப்புக்களை நிர்மாணிப்பதையும் அடையாளப்படுத்துங்கள். இனி இவற்றை அலட்சியப்படுத்த முடியாது. பாதுகாப்பற்ற மற்றும் அச்சுறுத்தலான பகுதிகளில் வாழ்பவர்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தும் தீர்மானத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

பாதுகாப்பற்ற மற்றும் அச்சுறுத்தலான பகுதிகளில் இருந்து அகற்றி பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தினாலும், நிலைமை வழமைக்கு திரும்பியவுடன், இரண்டு பக்கத்திலும் வாழும் நிலை காணப்பட்டது.இனி இவ்வாறு செயற்பட இடமளிக்க முடியாது என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த அரச அதிகாரிகள், வெள்ள அனர்த்தம் தொடர்பில் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுத்தும் பெரும்பாலானவர்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேறவில்லை. இச்சந்தர்ப்பத்தில் பொலிஸ், இராணுவத்தினர் அல்லது அரச அதிகாரிகள் பொதுமக்களை அவ்விடத்தில் இருந்து பலவந்தமான முறையில் வெளியேற்றுவதற்கு முயற்சித்தால் அது மாறுப்பட்ட பிரச்சிகைளை   ஏற்படுத்தும் என்றனர்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, தற்போதைய நெருக்கடியான நிலையில் முதலில் உயிரை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் தனது வீடு என்று உணர்வுபூர்வமாக சிந்திப்பார்கள். அதனையும் நாம் கரிசணை கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும் மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. பாதுகாப்பற்ற மற்றும் அச்சுறுத்தலான பகுதிகளில் வாழ்பவர்களை பலவந்தமான முறையில் வெளியேற்றுமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.அதற்குரிய சட்டமும் தற்போது அமுலில் உள்ளது.

மாகாண மட்டத்தில் வீதிகள்,பாலங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து உடன் அறிக்கை தயாரியுங்கள். சகல பாதிப்புக்களையும் தரவுப்படுத்துங்கள் அப்போது தான் புனரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

சுற்றறிக்கைகள் மற்றும் தினப்பணிகளில் இருந்துக் கொண்டு செயற்படாமல் தற்போதைய இக்கட்டான நிலையில் இருந்து மீள்வதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.   புயல் மற்றும் வெள்ள அனர்த்ததால் ஏற்பட்ட பாதிப்பால் பகுதியளவிலும், முழுமையாகவும் சேதமடைந்த வீடுகளை விரைவாக புனரமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலில் பாதுகாப்பான சூழலில் வீட்டை நிர்மாணித்துக் கொடுக்க வேண்டும். தேசிய நிதியை மாத்திரம் கொண்டு இந்த அபிவிருத்திகளை விரைவாக மேற்கொள்ள முடியாது. சர்வதேச தரப்பில் இருந்து ஒத்துழைப்பு பெறுவதற்கு பொது நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள...

2025-12-06 16:43:18
news-image

மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும்...

2025-12-06 15:42:56
news-image

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு : மரணமடைந்த...

2025-12-06 15:34:58
news-image

71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் :...

2025-12-06 15:26:09
news-image

மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்தார் ஜனாதிபதி

2025-12-06 15:52:19
news-image

வெலிமடை- நுவரெலியா வீதி போக்குவரத்திற்காக மீண்டும்...

2025-12-06 15:22:43
news-image

7 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்க...

2025-12-06 15:19:56
news-image

டித்வா புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார்...

2025-12-06 13:56:32
news-image

தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை...

2025-12-06 14:03:54
news-image

நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறுகின்றது !

2025-12-06 13:08:58
news-image

நுவரெலியா - கந்தப்பளையில் வெள்ளத்தால் அழிந்துள்ள...

2025-12-06 13:06:38
news-image

வீடுகளை சுத்தம் செய்ய இழப்பீடு :...

2025-12-06 13:35:19