வாழும் அடிப்படை உரிமையை மீறினால், அது அரசியலமைப்பு மீறலாக அமையலாம் - உயர்நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி ஐ.தே.க. குற்றச்சாட்டு

Published By: Vishnu

03 Dec, 2025 | 03:22 AM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த வழக்குகளில் உயர் நீதிமன்றத்தின் அவதானிப்பை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. ஒரு நெருக்கடியின் போது செயற்படத் தவறுவது அல்லது தீங்கு ஏற்படுவதைத் தடுக்கத் தவறுவது, வாழும் அடிப்படை உரிமையை மீறினால், அது அரசியலமைப்பு மீறலாக அமையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

2ஆம் திகதி செவ்வாய்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டு ஐ.தே.க. இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கடந்த வார வெள்ளப்பெருக்கின் போது தேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தவறியதாக அரசாங்கத்தின் மீது ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த வாரம் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின் போது இலங்கையின் தேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தத் தவறியுள்ளது. அரசாங்கத்தால் இழைக்கப்பட்டுள்ள இந்த தவறானது நாட்டில் பேரழிவின் அளவை பாரதூரமாக அதிகரிக்கச் செய்திருக்கிறது.

அனர்த்த முகாமைத்துவச் சட்டம் இலக்கம் 13, 2005 இன் கீழ் தேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்துவது அனர்த்த முகாமைத்துவ சபைக்கு சட்டப்படி கட்டாயமானது. இருப்பினும், திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.

வளிமண்டலவியல் திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுடனும், சர்வதேச ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளுடனும் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு இந்த திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆரம்ப எச்சரிக்கைகளை வழங்குதல், விபரக்குறிப்பு அறிக்கைகளைத் தயாரித்தல் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், ஊடகங்கள், கைபேசி எச்சரிக்கைகள், அழைப்பு நிலையங்கள் மற்றும் உள்ளூராட்சி அதிகாரசபைகள் மூலம் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு எச்சரிக்கைகளைப் பரப்புதல் கட்டாயமாகும்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர நடவடிக்கைப் பிரிவு, இராணுவம், பாதுகாப்புத்துறை, மாகாண நிறுவனங்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புக்களை உள்ளடக்கிய 'கடைசி மைல் பரவல்' செயல்முறையையும் இத் திட்டம் வலியுறுத்துகின்றது. ஆனால் இவற்றில் எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

தித்வா புயல் பாரிய தாக்கத்தை செலுத்தும் என்று அறிந்திருந்தும் நவம்பர் 27 ஆம் திகதி அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மிக முக்கியமான செயல்பாட்டு நாளாக இருந்த நவம்பர் 28 ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. மேலும் திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்ட ஆரம்ப எச்சரிக்கை தொடர்பாடல் ஒருபோதும் அமுல்படுத்தப்படவில்லை.

அனர்த்த நிலையை அறிவிக்க அனுமதிக்கும் அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் பிரிவுகள் 11 மற்றும் 12 ஐ ஜனாதிபதி பிரயோகிக்கத் தவறியதால், சட்டம் ஒருபோதும் செயல்பாட்டுக்கு வரவில்லை. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை அனர்த்தத்தினால் ஏற்படும் தீங்குகளைத் தணிக்கச் சட்டங்களின் உரிய பிரிவுகளின் கீழ் செயற்படத் தவறிவிட்டனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் அவதானிப்பை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. ஒரு நெருக்கடியின் போது செயற்படத் தவறுவது அல்லது தீங்கு ஏற்படுவதைத் தடுக்கத் தவறுவது, வாழும் அடிப்படை உரிமையை மீறினால், அரசியலமைப்பு மீறலாக அமையலாம் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச...

2025-12-06 17:26:11
news-image

யாழ். நிலத்தடி நீரின் பாதுகாப்புக்கு இன்றியமையாத...

2025-12-06 15:39:21
news-image

மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள...

2025-12-06 16:43:18
news-image

மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும்...

2025-12-06 15:42:56
news-image

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு : மரணமடைந்த...

2025-12-06 15:34:58
news-image

71 நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம் :...

2025-12-06 15:26:09
news-image

மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்தார் ஜனாதிபதி

2025-12-06 15:52:19
news-image

வெலிமடை- நுவரெலியா வீதி போக்குவரத்திற்காக மீண்டும்...

2025-12-06 15:22:43
news-image

7 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்க...

2025-12-06 15:19:56
news-image

டித்வா புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார்...

2025-12-06 13:56:32
news-image

தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை...

2025-12-06 14:03:54
news-image

நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறுகின்றது !

2025-12-06 13:08:58