தேசிய அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் செயற்பட்டிருந்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தை குறைத்துக்கொண்டிருக்கலாம் - அகிலவிராஜ் காரியவசம்

Published By: Vishnu

03 Dec, 2025 | 03:15 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

தேசிய அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் செயற்பட்டிருந்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தை குறைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அரசாங்கம் அதனை செய்ய தவறியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (2) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் இடம்பெற்ற அனர்த்த நிலையை கட்டுப்பதடுத்த அரசாங்கம் செயற்பட்ட விதம் கரணமாக பாரியளவில் உயிர்களை இழக்க நேரிட்டோம். என்றாலும் இந்த நிலைமையை நியாயப்படுத்த அரசாங்கம் பல்வேறு விடயங்களை தெரிவித்து வருகிறது. ஆனால் நாட்டில் அனர்த்தம் ஒன்று ஏற்படம் இருக்கும்போது அதற்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்ற திட்டம் நாட்டில் இருக்கிறது. தேசிய அனர்த்த முகாமைத்துவ சட்டம் இருக்கிறது.

தேசிய அனர்த்த முகாமைத்துவ சட்டத்தில் அனர்த்தம் ஒன்றுக்கு முகம்கொடுக்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்களை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் அரசாங்கம் அந்த திட்டங்களை பின்பற்ற தவறி இருக்கிறது. இலங்கயைில் 500 மில்லி மீட்டர் அளவில் பாரிய மழை வீழ்ச்சி ஏற்படப்போவதாக நவம்பர் 11ஆம் திகதி பி பி சி செய்தி வெளியிட்டிருந்தது. அதேபோன்று நபம்பர் 12ஆம் திகதி எமது நாட்டின் வளிமண்லவியல் திணைக்கள ஆணையாளரும் இதுதொடர்பில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு இரண்டு வாரங்களுக்கு முன்னரே இவ்வாறான அனர்த்த நிலைமை ஏற்படப்போவது தொடர்பாக தகவல் அறிவிக்கப்பட்டிருந்தபோதும் அரசாங்கம் இந்த தேசிய அனர்த்த முகாமைத்துவ திட்டத்தின் பிரகாரம் செயற்பட தவறி இருக்கிறது. நவம்பர் 25ஆம் திகதி இந்துனேசியா, தாய்லாந்துபோன்ற நாடுகளில் பாரிய வெள்ளப்பெறுக்கு ஏற்பட்டபோது, இந்த அனர்த்தம் இலங்கைக்கும் வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது அரசாங்கம் இதுதொடர்பில் என்ன செய்தது? எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அனர்த்தம் ஒன்று ஏற்படும்போது கட்டிடங்கள் சேதமாவதை தடுத்திருக்கலாம் என நாங்கள் தெரிவிக்கவில்லை. ஆனால் மக்களின் உயர்களை அரசாங்கதங்கத்துக்கு பாதுகாக்க முடிந்திருக்கும் என்றே தெரிவிக்கிறோம். இவ்வாறு பாரிய மழைவீழ்ச்சி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் நீர் நிலைகளின் தண்ணீரை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். அரச அதிகாரிகள் தீர்மானங்களை எடுக்க பயப்படுகின்றனர். இதுதொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு முறைமை ஒன்று இல்லை..முறையான தீர்மானம் எடுக்க தவறியதால் இல்லாமல் போன உயிர்களுக்கு பொறுப்புக்கூறுவது யார் என கேட்கிறோம்.

அத்துடன் அனர்த்தம் ஏற்பட்ட பின்னரும் அதுதொடர்பில் எவ்வாறு செயற்படுவது என அரசாங்கத்துக்கு தெளிவில்லாமல் இருந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதுதொடர்பில் தகவல் தெரிவிக்க இரண்டு நாட்களாக தொலை தொடர்புகள் செயலிழந்திருந்தன. இவ்வாறான நிலைமைமகளின்போது அரச இயந்திரமே செயற்பட்டிருக்க வேண்டும். அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க தவறியதால், நாடு பாரியளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது.

சுனாமியால் பாதிக்கப்பட்டதைவிட பல மடங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. சுனாமியால் நாட்டில் ஒரு பகுதியே பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது முழு நாடும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அனைவரது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் விவசாய பூமி, தொழிற்சாலைகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கு எவ்வாறு முகம்கொடுக்கப்போறோம்? வைத்தியசாலைகளில் மருந்துக்கு தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதுதொடர்பில் நடவடிக்கை எடுப்பதை காணவில்லை.

மேலும் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான தகவல் அரசாங்கத்திடம் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிராணம் வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்தாலும், களத்தில் அவ்வாறு எதனையும் காணக்கூடியதாக இல்லை. அரசாங்கத்திடம் முறையான திட்டமிடல் இல்லாமையே இதற்கு காரணமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விற்பனைக்கான மோட்டார் சைக்கிள்களை ஓடிப்பார்ப்பதாகக் கூறி...

2026-07-19 17:54:15
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பு முயற்சியை கைவிட...

2026-07-19 17:44:06
news-image

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்...

2026-07-19 17:32:33
news-image

18 கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன்...

2026-07-19 17:29:40
news-image

தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்தில்...

2026-07-19 17:25:55
news-image

அரச பாடசாலை கட்டிடங்களுடன் இணைந்ததாக முன்பள்ளிகளை...

2026-07-19 16:51:27
news-image

செம்மணி புதைகுழிக்குள் உட்கார்ந்த நிலையில் என்பு...

2026-07-19 16:47:25
news-image

120 பயனாளிகளுக்கு கடல் அட்டை உற்பத்திப்...

2026-07-19 16:36:04
news-image

79 இலட்சம் ரூபா பெறுமதியான சீன...

2026-07-19 16:11:11
news-image

நீரில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழப்பு

2026-07-19 15:20:17
news-image

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில்...

2026-07-19 17:51:53
news-image

அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிப்பவர்கள் தற்கொலை...

2026-07-19 15:02:16