நாட்டை ஸ்தம்பித நிலைக்குத் தள்ளிய அனர்த்தம் தொடர்பில் உலகநாடுகளின் தலைவர்கள், இராஜதந்திரிகளிடமிருந்தும் அனுதாபச்செய்திகள்

Published By: Vishnu

03 Dec, 2025 | 03:05 AM
image

(நா.தனுஜா)

இலங்கையை ஸ்தம்பித நிலைக்குத் தள்ளியிருக்கும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவின் விளைவாகப் பதிவான உயிரிழப்புக்கள், சொத்துச்சேதங்கள் தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவதாகத் தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், இவ்வனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

'டிட்வா' சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் இலங்கை மிகமோசமான பேரழிவுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இலங்கையுடுனான உடன்நிற்பை வெளிப்படுத்திவரும் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்கள், இலங்கைக் கு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றன.

ரஷ்ய ஜனாதிபதி

அதற்கமைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுத்து மூலம் தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், 'உங்களது நாட்டை ஸ்தம்பித நிலைக்குத் தள்ளியிருக்கும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவின் விளைவாகப் பதிவான உயிரிழப்புக்கள், சொத்துச்சேதங்கள் தொடர்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரியப்படுத்துகிறேன். இவ்வனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான எமது ஆதரவை வெளிப்படுத்தும் அதேவேளை, விரைவான மீட்சிக்காகப் பிரார்த்திக்கிறோம்' என அந்த எழுத்துமூல செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம்

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் நேற்று (2) காலை தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு பேசிய அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் விசேட பிரதிநிதி சேர்ஜியோ கோர், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது அனுதாபத்தை வெளிப்படுத்தியதுடன், இலங்கையின் நிலைவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் ஜனாதிபதியிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

ஈரான் வெளிவிவகார அமைச்சர்

ஈரான் வெளிவிவகார அமைச்சர் செய்யத் அப்பாஸ் அரக்சியின் அனுதாபச்செய்தியில் 'அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பெருமளவானோர் உயிரிழந்திருப்பதாகவும், காயமடைந்திருப்பதாகவும் வரும் செய்தியால் மிகுந்த கவலையடைகிறேன். ஈரானிய அரசாங்கத்தின் சார்பில் எமது அனுதாபத்தை வெளிப்படுத்துவதுடன், இவ்வேளையில் உங்களுடனும், உங்கள் அரசாங்கத்துடனும் தோளோடு தோளாக நிற்கிறோம்' எனக் கூறப்பட்டுள்ளது.

ஓமான் மன்னர்

'அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த அனர்த்தத்தில் காயமடைந்தவர்கள் விரைவாகக் குணமடையவதற்கும், நாடு துரிதமாக மீட்சியடைவதற்கும் பிரார்த்திக்கிறோம்' என ஓமான் மன்னர் சுல்தான் ஹைத்தம் பின் தாரிக்கினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உக்ரைன் வெளிவிவகார அமைச்சர்

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் அன்ட்ரி சைபிஹா, 'ஆசியப்பிராந்தியத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவின் காரணமாக 900 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதுடன் மேலும் பல நூற்றுக்கணக்கானோர் காணாமல்போயுள்ளன்ர. இந்தக் கடினமான வேளையில் நாம் இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசிய மக்களுடன் தோளோடு தோளாக நிற்கிறோம். அத்தோடு இவ்வனர்த்தத்தினால் தமது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும். இவ்வாறான அனர்த்த சூழ்நிலைகளின்போது ஒற்றுமை மிக அவசியம் என்பதை நாமறிவோம். தற்போது உக்ரைன் கடினமான தருணத்தில் இருந்தாலும், தேவைப்படும் உதவிகளை வழங்கத் தயாராக இருக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் வெளிவிவகார செயலாளர்

'டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் மிகமோசமான பாதிப்புக்கள் தொடர்பில் வெகுவாகக் கவலையடைகிறோம். இக்கடினமான சூழ்நிலையில் இலங்கை மக்களுக்காகப் பிரார்த்திப்பதுடன், காணாமல்போனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்' என பிலிப்பைன்ஸ் வெளிவிவகார செயலாளர் தெரெஸா பி.லஸாரோ அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் ரோமானியா, மொன்ரெனீக்ரோ, சீஷெல்ஸ் உள்ளிட்ட நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் தமது கவலையை வெளிப்படுத்தியிருப்பதுடன், இக்கடினமான சூழ்நிலையில் இலங்கையுடன் உடன்நிற்பதாகவும் அறிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"முழு நாடுமே ஒன்றாக'' என்னும் நடவடிக்கைகமைய...

2026-07-14 12:50:54
news-image

பிரான்ஸ் ஜனாதிபதியின் அழைப்பை வரவேற்கிறது இலங்கை...

2026-07-14 12:49:42
news-image

வெவ்வேறு பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்...

2026-07-14 12:51:36
news-image

லிந்துலையில் நீரில் மூழ்கிய மாணவனை தேடும்...

2026-07-14 12:24:12
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-07-14 12:21:34
news-image

ஜனாதிபதிக்கு இலங்கை நீதிச்சேவை சங்கம் கடிதம்

2026-07-14 12:15:12
news-image

மூதூர் சந்தையில் கைப்பற்றப்பட்ட 500 கிலோ...

2026-07-14 11:58:00
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை;...

2026-07-14 11:31:55
news-image

மத்தள விமான நிலையத்தை நிர்வகிக்க 19...

2026-07-14 11:31:37
news-image

இலங்கையில் பயணிகளை ஏற்றிச்செல்ல ட்ரோன் சேவை...

2026-07-14 11:26:29
news-image

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தில் பறந்த ட்ரோன்...

2026-07-14 11:14:47
news-image

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை ஆண்டிறுதிக்குள்...

2026-07-14 10:45:46