இன்டர்நெஷனல் லீக் ரி20 ஆரம்பப் போட்டியில் நடப்பு சம்பியன் துபாய் கெப்பிட்டல்ஸ் அணியை டெசர்ட் வைப்பர்ஸ் அணி வெற்றிகொண்டது

Published By: Vishnu

03 Dec, 2025 | 03:00 AM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற நான்காவது இன்டர்நெஷனல் லீக் ரி20 அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில்  நடப்பு சம்பியன்  துபாய் கெப்பிட்டல்ஸ் அணியை 4 விக்கெட்களால் டெசர்ட் வைப்பர்ஸ் அணி வெற்றிகொண்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தசுன் ஷானக்க தலைமையிலான துபாய் கெப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் ரோவ்மன் பவல் 39 ஓட்டங்களையும் மொஹம்மத் நபி 29 ஓட்டங்களையும் ஷயன் ஜஹாங்கிர் 19 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நூர் அஹ்மத் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டேவிட் பெய்ன் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் குஸெய்மா தன்வீர் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

151 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாம் கரன் தலைமையிலான டெசர்ட் வைப்பர்ஸ் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அண்ட்றீஸ் கௌஸ் 58 ஓட்டங்களையும் பக்கார் ஸமான் 26 ஓட்டங்களையும் பெற்றதுடன் அவர்கள் இருவரும் 28 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

மெக்ஸ் ஹோல்டென் 16 ஓட்டங்களைப் பெற்றார்.

டேன் லோரன்ஸ் 19 ஓட்டங்களுடனும் குஸெய்மா தன்வீர் 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் வக்கார் சலாம்கீல் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஸ்கொட் கியூரி 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-17 23:41:20
news-image

ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும்...

2026-07-17 15:31:54
news-image

இந்தியாவுடனான ஒருநாள் தொடரை இங்கிலாந்து சமப்படுத்தியது;...

2026-07-17 12:24:24
news-image

ஆட்ட நிர்ணயம் தொடர்பில் லங்கா பிறீமியர்...

2026-07-17 15:31:56
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட 19இன்கீழ் இலங்கை...

2026-07-16 20:31:40
news-image

கொழும்பு SSC மைதானத்தில் LPL தொடக்க...

2026-07-16 20:26:18
news-image

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம்,...

2026-07-16 18:24:57
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தலை விரைவில் நடத்துமாறு...

2026-07-16 15:53:48
news-image

போக்லண்ட் பதாகையை ஏந்தியதால் ஆர்ஜன்டினா மீது...

2026-07-16 18:22:47
news-image

தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் தலைவர்...

2026-07-16 15:04:06
news-image

தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டுவந்து இங்கிலாந்தை...

2026-07-16 09:29:57