ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்டர்நெஷனல் லீக் ரி20 ஆரம்பமானது

Published By: Vishnu

02 Dec, 2025 | 11:57 PM
image

(நெவில் அன்தனி)

நான்காவது இன்டர்நெஷனல் லீக் ரி20 (சர்வதேச லீக் ரி20) கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் செவ்வாய்க்கிழமை (02) ஆரம்பமானது.

அபு தாபி நைட் ரைடர்ஸ், டெசர்ட் வைப்பர்ஸ், துபாய் கெப்பிட்டல்ஸ், கல்வ் ஜயன்ட்ஸ், ஆஐ எமிரேட்ஸ், ஷார்ஜா வொரியர்ஸ் ஆகிய ஆறு அணிகள் இன்டர்நெஷனல் லீக் ரி20 கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுகின்றன.

கடந்த வருடம் இறுதிப் போட்டியில் விளையாடிய துபாய் கெப்பிட்டல்ஸ் மற்றும் டெசர்ட் வைப்பர்ஸ் அணிகள் இன்றைய ஆரம்பப் போட்டியில் மோதுகின்றன.

கடந்த வருடம் நடைபெற்ற மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியில் 190 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய துபாய் கெப்பிட்டல்ஸ் கடைசி ஓவரில் வெற்றி இலக்கை கடந்து சம்பியனானது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் 54ஆவது தேசிய தினம் இன்றாகும்.  இதன் காரணமாக இன்றைய ஆரம்பப் போட்டிக்கு முன்னர் துபாய் விளையாட்டரங்கில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான இரசிகர்கள் அரங்கில் குழுமியிருந்து ஆரம்பப் போட்டியை கண்டு களிக்கின்றனர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய துபாய் கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.

இன்றைய போட்டியில் லொக்கி பேர்கசனுக்குப் பதிலாக டெசர்ட் வைப்பர்ஸ் அணியின்  தலைவராக சாம் கரண் விளையாடுகிறார்.

அணித் தலைமைகளில் மாற்றம்

இந்த வருடம் மூன்று அணிகளுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்றைய மூன்று அணிகளில் தலைமைகளில் மாற்றம் இல்லை.

MI எமிரேட்ஸ் அணியின் தலைவராக இருந்த நிக்கலஸ் பூரணுக்குப் பதிலாக கீரன் பொலார்ட் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நடப்பு சம்பியன் துபாய் கெப்பிட்டல்ஸ் அணியின் புதிய தலைவராக இலங்கை வீரர் தசுன் ஷானக்க நியமிக்கப்பட்டுள்ளார். சாம் பில்லிங்ஸ் கடந்த வருடம் இவ்வணியின் தலைவராக இருந்தார்.

சுனில் நரேனிடம் இருந்த நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் பதவி ஜேசன் ஹோல்டரிடம் கைமாறியுள்ளது.

டெசர்ட் வைப்பர்ஸ் அணித் தலைவராக லொக்கி ஃபேர்கசன், கல்வ் ஜயன்ட்ஸ் அணித் தலைவராக ஜேம்ஸ் வின்ஸ், ஷார்ஜா வொரியர்ஸ் அணித் தலைவராக டிம் சௌதீ ஆகியோர் தொடர்ந்தும் செயற்படுகின்றனர்.

இலங்கை வீரர்கள்

இந்த வருடப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் சிலரும் விளையாடுகின்றனர்.

சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க (டெசர்ட் வைப்பர்ஸ்), தசுன் ஷானக்க மற்றும் துஷ்மன்த சமீர (துபாய் கெப்பிட்டல்ஸ்), பெத்தும் நிஸ்ஸன்க மற்றும் நுவன் துஷார (கல்வ் ஜயன்ட்ஸ்), கமிந்து மெண்டிஸ் (MI எமிரேட்ஸ்), மஹீஷ் தீக்ஷன மற்றும் மதீஷ பத்திரண (கல்வ் வொரியர்ஸ்) ஆகிய எட்டு இலங்கை வீரர்கள் ஐந்து அணிகளில் இடம்பெறுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூஸிலாந்துடனான டெஸ்டை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டது...

2025-12-06 17:25:02
news-image

இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு...

2025-12-05 23:21:18
news-image

வரலாற்றில் மிகப் பெரிய பீபா உலகக்...

2025-12-05 20:17:23
news-image

531 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி...

2025-12-05 14:56:49
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது இளையோர் 3 நாள்...

2025-12-05 14:00:08
news-image

இலங்கை வீரர் பெத்தும் நிஸ்ஸன்கவின் அரைச்...

2025-12-05 13:01:48
news-image

இலங்கையை மீளக் கட்டி எழுப்பும் நிதிக்கு...

2025-12-04 19:47:32
news-image

மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்டில் டொம் லெதம்,...

2025-12-04 15:39:58
news-image

லிவிங்ஸ்டோன் அதிரடி துடுப்பாட்டம்;  அபு தாபி...

2025-12-04 15:28:47
news-image

இந்தியாவுடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில்...

2025-12-04 04:52:56
news-image

இந்தியாவை பலமான நிலையில் இட்ட கோஹ்லி,...

2025-12-03 19:11:17
news-image

முதலாவது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தில்...

2025-12-03 15:31:31