மேற்கிந்தியத் தீவுகளுடனான முதலாவது டெஸ்டில் சொந்த மண்ணில் தடுமாறுகிறது நியூஸிலாந்து

Published By: Vishnu

02 Dec, 2025 | 11:52 PM
image

(நெவில் அன்தனி)

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கிரைஸ்ட்சேர்ச் ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (02) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அதன் சொந்த மண்ணில் தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதலாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

மேற்கிந்தியத் தீவுகளின் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்ந்த 8 விக்கெட்களை தம்மிடையே பகிர்ந்துகொண்டனர்.

நியூஸிலாந்தின் முதலாவது விக்கெட் ஒரு ஓட்டத்துக்கு வீழ்ந்தது.

எனினும் அணித் தலைவர் டொம் லெதம், முன்னாள் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர் செய்தனர்.

அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன.

வில்லியம்சன் 52 ஓட்டங்களுடனும் டொம் லெதம் 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து ரச்சின் ரவீந்த்ரா 3 ஓட்டங்களுடனும் வில் யங் 14 ஓட்டங்களுடனும் டொம் பளண்டெல் 29 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (148 - 6 விக்.)

இந் நிலையில் மைக்கல் ப்றேஸ்வெல் (47), நேதன் ஸ்மித் (23) ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர்.

பந்துவிச்சில் ஓஜே ஷீல்ட்ஸ் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜஸ்டின் கிறீன் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கெமர் ரோச் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரெட் ஸ்டார் - நியூ யங்ஸ்...

2026-08-08 13:18:49
news-image

வடக்கும் தெற்கும் நான்காவது தடவையாக மோதும்...

2026-08-08 13:11:34
news-image

சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் நான்கு அணிகளுக்கு...

2026-08-08 10:00:06
news-image

கலம்போ கெப்ஸ் அணியை 6 விக்கெட்களால்...

2026-08-08 05:40:25
news-image

கலம்போ எவ்.சி. - றினோன் போட்டி...

2026-08-07 19:27:38
news-image

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா...

2026-08-07 16:07:43
news-image

கண்டி றோயல்ஸை வெளியேற்றி இரண்டாவது தகுதிகாண்...

2026-08-06 02:19:43
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ்

2026-08-05 22:17:51
news-image

ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor...

2026-08-05 17:51:06
news-image

பொதுநலவாய போட்டிகளில் தங்கம் வென்ற ரொமேஷ்...

2026-08-05 12:32:55
news-image

கடைசி மகளிர் ரி20இல் பாகிஸ்தானின் சுழற்சியில்...

2026-08-04 23:54:46
news-image

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியினர் இலங்கை...

2026-08-04 23:18:26