(நெவில் அன்தனி)
பங்களாதேஷில் நடைபெறவுள்ள 12ஆவது பங்களாதேஷ் பிறீமியர் லீக் ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையிலிருந்து தசுன் ஷானக்க, ஏஞ்சலோ மெத்யூஸ் உட்பட 7 வீரர்கள் விளையாட ஒப்பந்தமாகியுள்ளனர்.
அவர்களில் 5 வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளதுடன் இருவர் நேரடி ஒப்பந்த அடிப்படையில் விளையாடவுள்ளனர்.
அண்மையில் ரி20 அணித் தலைவராக நியமிக்கப்பட்ட தசுன் ஷானக்கவை டாக்கா கெப்பிட்டல்ஸ் அணி அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
வெளிநாட்டு வீரர்களில் அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் தசுன் ஷானக்க ஆவார்.
அவரை டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணி ஒரு கோடி 69 இலட்சம் இலங்கை ரூபாவுக்கு (55,000 அமெரிக்க டொலர்) ஏலத்தில் எடுத்துள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் தலைவரான ஏஞ்சலோ மெத்யூஸை ஒரு கோடி எட்டு இலட்சம் ரூபாவுக்கு (35,000 அமெரிக்க டொலர்கள்) சில்ஹெட் டைட்டனஸ் அணியும் முன்னாள் இலங்கை வீரர் நிரோஷன் திக்வெல்லவை அதே விலைக்கு சட்டோக்ராம் றோயல்ஸ் அணியும் ஏலத்தில் வாங்கியுள்ளன.
இலங்கையின் சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் வீரர் துஷான் இஷார ஹேமன்தவை 77 இலட்சம் இலங்கை ரூபாவுக்கு ராஜ்ஷாஹி வொரியர்ஸ் அணி ஏலத்தில் வாங்கியுள்ளது.
ஏஞ்சலோ பெரேராவின் ஏல விலை 61 இலட்சம் இலங்கை ரூபாவாகும். அவரை சட்டொக்ராம் றோயல்ஸ் அணி வாங்கியுள்ளது.
இந்த ஐவரைவிட இலங்கை விக்கெட் காப்பாயர் குசல் மெண்டிஸை நோவாகாலி எக்ஸ்ப்ரஸ் அணியும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பினுர பெர்னாண்டோவை ராஜ்ஷாஹி வொரியர்ஸ் அணியும் நேரடியாக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
பங்களாதேஷ் பிறீமியர் லீக் கிரிக்கெட்டுக்கான ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த 53 வீரர்கள் பதிவு செய்திருந்தபோதிலும் ஐந்து வீரர்களே ஏலத்தில் வாங்கப்பட்டனர்.
பங்களாதேஷ் பிறிமியர் லீக் கிரிக்கெட்டில் கடந்த வருடம் சம்பியனான ஃபோர்ச்சூன் பாரிஷல் அணி பங்குபற்றவில்லை.
இந்த வருடம் டாக்கா கெப்பிட்டல்ஸ், சட்டோக்ராம் றோயல்ஸ், நோவாகாலி எக்ஸ்ப்ரஸ், ரங்பூர் ரைடர்ஸ், ராஜ்ஷாஹி வொரியர்ஸ், சில்ஹெட் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பங்குபற்றுகின்றன.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM