இலங்கையுடன் மூன்று ரி20 போட்டிகளில் விளையாட ஜனவரியில் பாகிஸ்தான் வருகை தருகிறது

Published By: Vishnu

02 Dec, 2025 | 09:13 PM
image

(நெவில் அன்தனி)

2026 ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு தயாராகும் பொருட்டு  அடுத்த வருடம் ஜனவரி மாதம் முற்பகுதியில் மூன்று சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் விளையாட  பாகிஸ்தான் அணியினர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

இலங்கைக்கும் ரி20 உலகக் கிண்ணத்துக்கு தயாராகும் தொடராக அமையவுள்ளது.

ஆனால், இந்த இருதரப்பு ரி20 கிரிக்கெட் தொடர் முழுமையாக தம்புள்ளையில் நடைபெறவுள்ளது.

ஜனவரி 7, 9, 11ஆம் திகதிகளிலேயே இப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இலங்கையில் கொழும்பிலும் கண்டியிலும் ரி20 உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் தம்புள்ளையில் போட்டிகள் நடத்தப்படுவதால் இரண்டு அணிகளுக்கும் போட்டி பரிச்சயம் கிடைக்குமேயன்றி ஆடுகள பரிச்சயம் கிடைக்காது.

எனினும் இரண்டு அணிகளினதும் பலம், பலவீனங்களை பரீட்சிப்பதாகவும் வீரர்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதாகவும்    இந்தத் தொடர் அமையும்.

ரி20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவுக்கு எதிரான போட்டி உட்பட பாகிஸ்தானின் சகல போட்டிகளும் இலங்கையிலேயே நடைபெறவுள்ளது.

இலங்கையின் போட்டிகளும் இங்குதான் நடைபெறும்.

கடந்த மே மாதம் பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகள் நிறைவடைந்ததிலிருந்து கடந்த 6 மாதங்களாக பாகிஸ்தான் அணியை கூடுதலான ரி20 போட்டிகளில் விளையாடச் செய்வதில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.

இக் காலப் பகுதியில் பங்களாதேஷுக்கு எதிராக சொந்த மண்ணிலும் அந்நிய மண்ணிலும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கரிபியன் தீவுகளிலும், இரண்டு மும்முனை தொடர்களிலும் ஆசிய கிண்ணத் தொடரிலும் பாகிஸ்தான் விளையாடி இருந்தது.

இலங்கை, இந்த வருடம் பங்களாதேஷுக்கு எதிரான ரி20 தொடரில் 1 - 2 என தோல்வி அடைந்ததுடன் ஸிம்பாப்வேக்கு எதிரான ரி20 தொடரில் 2 - 1 என வெற்றிபெற்றது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் சுற்றில் 3 போட்டிகளில் வெற்றிபெற்ற இலங்கை, சுப்பர் 4 சுற்றில் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து நாடு திரும்பியது.

ராவல்பிண்டியில் கடைசியாக நடைபெற்ற மும்முனை தொடரிலும் இலங்கையின் பெறுபேறுகள் சிறப்பாக அமையவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தலை விரைவில் நடத்துமாறு...

2026-07-16 15:53:48
news-image

போக்லண்ட் பதாகையை ஏந்தியதால் ஆர்ஜன்டினா மீது...

2026-07-16 15:00:45
news-image

தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் தலைவர்...

2026-07-16 15:04:06
news-image

தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டுவந்து இங்கிலாந்தை...

2026-07-16 09:29:57
news-image

இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு...

2026-07-15 20:55:07
news-image

இறுதிப் போட்டிக்கு குறிவைத்து  உலகக் கிண்ண...

2026-07-15 19:34:55
news-image

MCA T10 கிண்ணத்தை கைப்பற்றிய சிட்டிசன்ஸ்...

2026-07-15 17:03:21
news-image

பிரான்ஸை எளிதாக வெளியேற்றிய ஸ்பெய்ன் உலகக்...

2026-07-15 09:45:43
news-image

ஐரோப்பிய பலவான்கள் பிரான்ஸ் - ஸ்பெய்ன்...

2026-07-14 21:51:19
news-image

சாத்தியமான நான்கு உலகக் கிண்ண இறுதிப்...

2026-07-14 20:47:02
news-image

லங்கா பிறீமியர் லீக் 2026 போட்டிகளை...

2026-07-14 13:40:15
news-image

செவிப்புலன் குறைபாடுடையோருக்கான T20 தொடர்: இலங்கையை...

2026-07-14 05:10:23