மலையக மகளிர் அபிவிருத்தி மன்றம் திரட்டிய நிவாரண உதவிகள் கம்பளையில் கையளிப்பு

Published By: Digital Desk 3

03 Dec, 2025 | 12:21 PM
image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான நிவாரண உதவிகளை திரட்டும் நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதன் ஓர் அங்கமாக வீரகேசரி பத்திரிகையுடன் இணைந்து மலையக மகளிர் அபிவிருத்தி மன்றமானது ஒருதொகை நிவாரணப்பொருட்களை கையளிக்க முன்வந்திருந்தது. 

அந்த வகையில் மலையகத்தின் அதிக உயிரிழப்பு மற்றும் அனர்த்தங்கள் பதிவன கண்டி, பதுளை , நுவரெலியா ஆகிய மாவட்டங்களை மையமாக கொண்டு அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 

அதற்கிணங்க அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களால் திரட்டப்பட்ட பணம், அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சேகரிக்கப்பட்டது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட சுமார் 1.5 மில்லியன்  ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களில் ஒருதொகை நேற்றுமுன்தினம் மாலை கம்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.  

அதேவேளை முகத்துவாரம் மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயத்தின் சார்பில் சேகரிக்கப்பட்ட ஒருதொகை நிவாரணப்பொருட்கள் மன்றத்தின் தலைவி பிரியா கார்த்திக் மற்றும் மன்றத்தின் பொருளாளர் உதயராணி உள்ளிட்ட குழுவினரிடம் நேற்றையதினம் வீரகேசரி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. 

மேற்படி அமைப்பினால் சேகரிக்கப்படும் நிவாரணப்பொருட்கள் மலையகத்தின் தூரப்பிரதேசங்களான பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் பின்தள்ளப்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதை நோக்கமாக கொண்டு இந்த நிவாரணப்பொருட்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

 அதனடிப்படையில் மேற்படி அமைப்புடன் இணைந்து நிவாரணப்பொருட்களை கையளிக்க விரும்புவோர் 0772375777, 0775670461 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புக்கொள்ள முடியும். மேலும் தலைநகரில் உள்ளவர்கள்  இலக்கம் 36,பரமானந்த விகாரை மாவத்தை, கொழும்பு 13 எனும் முகவரிக்கு தமது உதவிகளை நேரில் கையளிக்கவும் முடியும் என மேற்படி அமைப்பு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் 32-33...

2026-07-17 10:29:48
news-image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு...

2026-07-16 19:04:03
news-image

கொழும்பு வடக்கில் 400 பேருக்கு இலவச...

2026-07-16 16:47:11
news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54
news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50