செல்வ வளத்தை அதிகரிப்பதற்கான பிரத்யேக குறிப்பு..!?

02 Dec, 2025 | 03:43 PM
image

சிறிய அளவிலோ... மத்திம அளவிலோ... அல்லது பெரிய அளவிலோ.. தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தன வரவு என்பது தங்கு தடை இன்றி நாளாந்தம் வர வேண்டும் என விரும்புவார்கள்.

ஆனால் பல காரணங்களால் அவர்களுடைய விருப்பம் பல தருணங்களில் நிறைவேறாது.  இத்தகைய தருணங்களில் தங்களுடைய செல்வ வளத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிகாட்டலை ஆன்மீக முன்னோர்களை சந்தித்து மேற்கொள்வார்கள். அத்தகைய தருணங்களில் அவர்கள் சில பிரத்யேக குறிப்புகளை வழங்குவது உண்டு. அதில் ஒன்றை தற்போது காண்போம்.

இதற்கு தேவையான பொருட்கள் : கொம்பு மஞ்சள் - வசம்பு - அருகம்புல்.

ரசாயனம் கலக்காத அசலான விரலி மஞ்சள் என்றும், கொம்பு மஞ்சள் என்றும் குறிப்பிடப்படும் மஞ்சள்+ வசம்பு ஆகிய இரண்டையும் வாங்கி வந்து வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள விநாயகர் ஆலயத்தில் அவருக்கு சமர்ப்பிக்கப்பட்ட அருகம்புல்லை.. அங்கு தொண்டு செய்யும் இறை ஊழியரிடம் அனுமதி பெற்று சிறிதளவு வாங்கி வாருங்கள்.

அதன் பிறகு சிறிதளவு கொம்பு மஞ்சள் + சிறிதளவு வசம்பு + சிறிதளவு அருகம்புல் + ஆகிய மூன்றையும் ஒரு நூலில் கட்டி , உங்களுடைய பூஜை அறையிலோ அல்லது உங்களுடைய விற்பனை நிலையத்தில் குபேர மூலையிலோ வைத்து.. நாளாந்தம் அதற்கு தீப தூபம் காட்டி வாருங்கள். இதிலிருந்து வெளிப்படும் சூட்சம ஆற்றல் உங்களுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ற தனவரவை உங்களுக்கு வழங்கும்.

தொகுப்பு: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உங்கள் ராசியும் அதிர்ஷ்ட வண்ணமும்

2026-08-15 17:08:56
news-image

செவ்வாய் தோஷம் நீங்குவதற்கான எளிய வழிமுறை

2026-08-14 14:25:37
news-image

பாக்யத்தை அருளும் பூஜையறை

2026-08-12 13:51:55
news-image

தீர்வு தரும் வெற்றிலை வழிபாடு

2026-08-11 16:26:03
news-image

பெண் சாபம் மற்றும் தோஷங்கள் நீங்குவதற்கான...

2026-08-10 15:33:08
news-image

திசை மாறி பயணிக்கும் பிள்ளைகளை நெறிப்படுத்துவதற்குரிய...

2026-08-07 16:11:17
news-image

பண தடையை நீக்கும் பிரத்யேக குறிப்பு

2026-08-06 18:15:57
news-image

சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான எளிய வழிமுறை..!

2026-08-05 17:01:02
news-image

ராசிக் கல் சூட்சமங்கள்

2026-08-04 19:17:09
news-image

மன அழுத்த மேலாண்மைக்கான சூட்சம வழிபாடு..!?

2026-08-04 15:27:31
news-image

தொழிலில் உள்ள தடைகளை அகற்றுவதற்கான சூட்சம...

2026-08-01 17:06:21
news-image

கர்ம வினைகளின் தாக்கத்தை அளிப்பதற்கான பிரத்யேக...

2026-07-31 17:00:24