நடிகர் விமல் நடிக்கும் 'மகா சேனா' படத்தின் இசை வெளியீடு

02 Dec, 2025 | 03:05 PM
image

நடிகர் விமல் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மகா சேனா' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மகா சேனா' எனும் திரைப்படத்தில் விமல், சிருஷ்டிடாங்கே, யோகி பாபு, ஜான் விஜய் ,கபீர் துஹான் சிங், மஹிமா குப்தா, சுபாங்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மானஸ் பாபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு உதய் பிரகாஷ் மற்றும் பிரவீன் குமார் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

அடர்ந்த வனமும், வனவிலங்குகளின் பின்னணியிலும் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மருதம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் 12- ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ் , தெலுங்கு , மலையாளம், கன்னடம்,  இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் யானையின் குணாதிசயத்தை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் கபீர் துஹான் சிங் பங்கு பற்றும் முதல் இசை வெளியீட்டு விழா இது என்பதால்.. அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்றி தெரிவித்த சூர்யா!

2026-08-16 11:12:29
news-image

மகுடம் - திரைப்பட விமர்சனம்

2026-08-15 16:27:02
news-image

ராகவ் ரங்கநாதன் நடிக்கும் 'பீப் '...

2026-08-15 16:29:50
news-image

துஷ்யந்த் நடித்திருக்கும் 'ஆல் பாஸ்' படத்தின்...

2026-08-15 19:13:44
news-image

அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்'...

2026-08-15 15:43:22
news-image

குரு சோமசுந்தரம் நடிக்கும் 'பாரீஸ் கஃபே'...

2026-08-15 15:45:02
news-image

விஸ்வநாத் & சன்ஸ் - திரைப்பட...

2026-08-14 20:02:53
news-image

'மொத ராத்திரி'க்காக ஆறு ஆண்டுகள் கஷ்டப்பட்ட...

2026-08-14 14:43:12
news-image

 வெளியீட்டு திகதியை அறிவித்த துல்கர் சல்மானின்...

2026-08-14 14:29:59
news-image

அக்சய் குமார் நடிக்கும் 'ஹைவான்' படத்தின்...

2026-08-14 14:29:28
news-image

கைத்தொலைபேசியால் நடிகை ஷகிலாவுக்கு வந்த வினை...

2026-08-14 09:18:00
news-image

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி'...

2026-08-13 17:44:56