பாதிப்புகளை துரிதமாக கண்டறிய உதவும் நவீன பரிசோதனை

02 Dec, 2025 | 02:52 PM
image

இன்றைய சூழலில் எம்மில் பலரும் சாலைகளில் பயணிக்கும் போதோ அல்லது வணிக வளாகங்களில் உலாவும் போதோ அல்லது வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போதோ திடீரென்று உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய பாதிப்பு உண்டாகும்.

இத்தகைய தருணங்களில் பாதிப்புக்குள்ளானவர்களை அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிப்பார்கள்.

இதுபோன்ற நெருக்கடியான தருணங்களில் வைத்தியர்கள் பாதிப்பின் நிலைப்பாட்டை துரிதமாகவும், துல்லியமாகவும் அவதானிக்க நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்ட EFAST எனும் பிரத்யேக பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.

இது தொடர்பாக வைத்திய நிபுணர்கள் தொடர்ந்து விவரிக்கையில், '' தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு முதலில் EFAST Scan எனும் பரிசோதனையை மேற்கொள்வார்கள்.

இதற்கு மருத்துவ மொழியில் எக்ஸ்டெண்டட் ஃபோகஸ்ட் அசெஸ்மென்ட் வித் சோனோகிராஃபி இன் ட்ராமா என குறிப்பிடுவார்கள்.  இத்தகைய பரிசோதனையின் போது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு, அதிர்ச்சியில் உறைந்திருக்கும் நோயாளியின் உடல் நிலை குறித்து துல்லியமாகவும் துரிதமாகவும் அவதானிக்கும் பரிசோதனை இது.

மூச்சுத் திணறல் - இதய பாதிப்பு - ரத்த அழுத்த பாதிப்பு - அதீத தொற்று பாதிப்பு- என பல்வேறு காரணங்களால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பார்கள். இவர்களுக்கு படுக்கை நிலையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஸ்கேன் மூலம் பரிசோதிக்கப்படுவார்கள்.

இதன் போது இதயம் துடிக்கிறதா? இல்லையா?  என்பதையும், இதயத்திற்கு ரத்த ஓட்டம் நடைபெறுகிறதா? இல்லையா? என்பதையும், வலது மற்றும் இடது புற இதயத்தின் இயக்கம் குறித்தும், இதயத்தில் போதுமான அளவிற்கு ரத்தமும், ரத்த ஓட்டமும் உள்ளதா ? என்பதையும், இதயத்தை இயங்க விடாமல் ஏதேனும் அடைப்பு அல்லது பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பதையும் இந்த பரிசோதனை மூலம் துல்லியமாக அவதானிக்கலாம்.

அத்துடன் பெரிகார்டியல் - பெரிஹெபாடிக் - பெரிஸ்பிளெனிக் - இடுப்பு - முன்புற மற்றும் பக்கவாட்டு புளுரல் இடைவெளிகள் - ஹீமோதோராக்ஸ் - நியூமோதோராக்ஸ் - புளுரல் எஃபியூஷன் ஆகியவற்றைப் பற்றியும் துரிதமாகவும், துல்லியமாகவும் அவதானித்து .. அவர்களுக்குரிய நிவாரண சிகிச்சையை உடனடியாக வழங்கி, அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத நிலையை ஏற்படுத்துவார்கள்.

வைத்தியர் வசந்த் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03
news-image

ஓலெக்ரானன் எலும்பு முறிவுக்கான நவீன சத்திர...

2026-07-03 17:26:41
news-image

டிஸ்பயோசிஸ் எனும் குடல் பகுதியில் ஏற்படும்...

2026-07-02 17:45:48
news-image

அகில்லெஸ் டெண்டினிடிஸ் எனும் காலில் ஏற்படும்...

2026-07-01 16:08:31
news-image

சிறுநீரக கற்களை அகற்றுவதற்கான நவீன சத்திர...

2026-06-30 17:12:11
news-image

பற்களை இழந்தவர்களுக்கு வர பிரசாதமான சைகோமா...

2026-06-29 16:50:27