இயக்குநரை கரம் பிடித்த நடிகை சமந்தா

02 Dec, 2025 | 02:14 PM
image

நடிகை சமந்தாவிற்கும், இயக்குநர் ராஜ் நிடிமொருக்கும் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் திருமணம் நடைபெற்றது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தாவிற்கும் , தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யாவுக்கும் திருமணம் நடைபெற்று, பிறகு விவாகரத்து செய்து, இருவரும் பிரிந்தனர்.

அதன் பிறகு நடிகர் நாக சைதன்யா 'பொன்னியின் செல்வன்' படத்தின் நடித்த நடிகை சோபிதா துளிபாலாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் 'தி ஃபேமிலி மேன்' எனும் இணைய தொடரை இயக்கிய இயக்குநர் ராஜ் நிடிமோருக்கும், சமந்தாவிற்கும் காதல் இருப்பதாக தகவல் வெளியானது.‌

இருவரும் டுபாய் உள்ளிட்ட நகரங்களில் ஒன்றாக சுற்றிக் கொண்டிருப்பதாக இணையத்தில் புகைப்படங்கள் வெளியாயின.

இந்நிலையில் இவர்கள் இருவரும் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நேற்று நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ளது‌.

ஆனால் இது தொடர்பாக சமந்தாவும் இயக்குநர் ராஜுவும் விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார்கள்  என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை பேசும்...

2026-08-11 20:58:57
news-image

நடிகர் பஹத் பாசில் நடிக்கும் 'டோன்ட்...

2026-08-11 16:51:42
news-image

நடிகர் துல்கர் சல்மானின் 'ஐ அம்...

2026-08-11 16:21:14
news-image

விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத்...

2026-08-11 16:19:16
news-image

சிக்கலில் சிக்கிய ‘சியான்’ காணொளியை நீக்கினார்..!

2026-08-11 13:07:57
news-image

திடீரென உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை.....

2026-08-11 10:20:42
news-image

சங்ககிரி ராஜ்குமார் நடிக்கும் 'ஒன் மேன்'

2026-08-10 17:11:32
news-image

ஜேம்ஸ் வசந்தனின் துள்ளல் இசையாக வெளியாகியுள்ள...

2026-08-10 17:11:21
news-image

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி'...

2026-08-10 17:09:05
news-image

ரசிகர்களுக்கு இரட்டை விருந்து வழங்கும் லேடி...

2026-08-10 16:51:16
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் யாஷ்...

2026-08-10 16:44:49
news-image

சூப்பர் குட் பிலிம்ஸ் அறிமுகப்படுத்தும் 45வது...

2026-08-10 16:42:52