இந்தோனேஷியாவில் பெரும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631 ஆக உயர்வு

02 Dec, 2025 | 11:39 AM
image

இந்தோனேஷியாவின் அசேப் மாகாணம் மற்றும் சுமாத்திரா தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட  மூன்று புயல்களினால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில்  சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631  ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும் பல பகுதிகளில் மண்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக மக்களை அணுக முடியாமல் இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளம் மற்றும் புயல்கள்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் குடியிருப்புகள் , வீதிகள் , கட்டிடங்கள் என்பன சேதடைந்துள்ளன. 

இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் மலேஷியாவிலும் ஏற்பட்ட  அனர்த்தங்களில் சிக்கி  1,140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில், இந்தியோனேஷியாவில் மட்டும் 631 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், சுமாத்திரா தீவின் பல பகுதிகள் வெள்ள நீர் நிரம்பியதால் மக்களை எளிதில் இன்னும் அணுக இயலாததால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  வெள்ளங்கள், மண்சரிவு காரணமாக வீதிகள் சேதடைந்ததால் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தாமதமாகி வருகின்றன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச ஊடகவியலாளர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் :...

2026-08-08 12:17:24
news-image

கேரளாவில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த...

2026-08-08 09:25:39
news-image

வரியை அறவிட அமெரிக்க நீதிமன்றம் தடை...

2026-08-07 16:47:13
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் மீது தாக்கல்...

2026-08-07 16:34:07
news-image

ஈரானுடனான மோதல் மிக விரைவில் முடிவுக்கு...

2026-08-07 15:25:25
news-image

சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக முடிந்த...

2026-08-07 14:23:12
news-image

தாய்லாந்தில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு ;...

2026-08-07 13:34:43
news-image

அமெரிக்காவில் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு புதிய கடும்...

2026-08-07 10:41:01
news-image

கொங்கோவில் எபோலா பரவல் மோசமடைந்துள்ளது; உடனடி...

2026-08-06 16:24:26
news-image

விஜய் தலைமையிலான தமிழக அரசின் வேளாண்மை...

2026-08-06 16:20:09
news-image

ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட்டின் பாகம் நிலவில்...

2026-08-05 14:00:59
news-image

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக...

2026-08-05 13:07:22