பாடசாலை விடுமுறைக்காக தன் உறவினர் வீட்டிற்குச் சென்ற பத்து வயது சிறுமியொருவரை 15 வயதுடைய உறவுக்கார சிறுவன் ஒருவர் கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த சிறுவனை கைது செய்த பொலிஸார் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸாரிடம் சிறுவனை ஒப்படைத்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி வைத்திய பரிசோதனைக்காக நாகொட வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸாரின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சிறுவனை களுத்துறை நிதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். பின்னர் குறித்த சிறுவன் 2 இலட்சம் பிணையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை களுத்துறை – தெற்கு பொலிஸார் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.