கார்கில்ஸ் வங்கி, 2025 ஆம் ஆண்டின் ஒன்பது மாதங்களுக்கான வரிக்குப் பின்னரான இலாபமாக (Profit after Tax) ரூபா 313 மில்லியனைப் பதிவு செய்துள்ளது.
நிதிசார் சிறப்பம்சங்கள் (Financial Highlights)
2025 செப்டெம்பர் 30 ஆந் திகதியுடன் நிறைவடைந்த ஒன்பது மாதங்களுக்கான வரிக்கு முந்திய இலாபமாக (Profit before Income Tax) ரூபா 620 மில்லியன் காணப்பட்டது. இது ரூபா 235 மில்லியன் அதிகரிப்பாகும்.
நிகரக் கட்டணம் மற்றும் தரகுக் கட்டண வருமானம் (Net fee and commission income) ரூபா 60 மில்லியனாக வளர்ச்சியடைந்துள்ளது.
வங்கி தொடர்ந்தும் நல்ல மூலதனம் மற்றும் திரவத்தன்மை கொண்டதாக காணப்படுகிறது:
மொத்த மூலதன விகிதம் (Total Capital Ratio) 17.08% ஆக உள்ளது.
திரவத்தன்மை ஈட்டு விகிதம் (LCR), ரூபா 195.57% ஆகவும் அனைத்து நாணயப் பிரிவில் 159.90% ஆகவும் உள்ளது.
நிகர நிலைத்தன்மையுள்ள நிதியிடல் விகிதம் (NSFR) 125.06% ஆக உள்ளது.
மொத்தச் சொத்துக்கள் (Total Assets) ரூபா 8.2 பில்லியனாக அதிகரித்துள்ளது.
2025 செப்டெம்பர் 30 ஆந் திகதி வரையில் கடன் புத்தகம் (Loan book) ரூபா 60.4 பில்லியனாககாணப்பட்டது, இது ரூபா 14.3 பில்லியனின் 31% வளர்ச்சியாகும்.
இலாபத்தன்மை மற்றும் வருமானம் (Profitability and Income)
2024 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2025 செப்டெம்பர் 30 உடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களுக்கான கார்கில்ஸ் வங்கியின் பெறுபேறுகள் இலாபத்தன்மையில் ரூபா 155 மில்லியன் அதிகரிப்பை எடுத்துக்காட்டியுள்ளதுடன், வரிக்குப் பின்னரான இலாபமாக ரூபா 313 மில்லியனைப் பதிவு செய்துள்ளது. ஒன்பது மாத காலப்பகுதியில் பதிவான நிகர வட்டி வருமானம் (Net interest income) ரூபா 2,743 மில்லியன் ஆகும். இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ரூபா 244 மில்லியனின் அல்லது 10% அதிகரிப்பாகும். குறைந்த வட்டி விகித நிர்வாகம் நடைமுறையில் இருந்தபோதிலும், 31% என்ற பாராட்டத்தக்க கடன் புத்தக வளர்ச்சியும், அத்துடன் வட்டி வீத வேறுபாட்டை (NIM) உகந்த முறையில் நிர்வகிப்பதற்காகச் சந்தை நிலைமைகளைப் பிரதிபலிக்கும் வகையில் வைப்புகள் மற்றும் முற்பணங்களின் விலைகளைத் தொடர்ந்து மாற்றியமைப்பதில் கவனம் செலுத்தியமையும் நிகர வட்டி வருமானத்தின் மேற்கூறிய வளர்ச்சிக்குக் காரணமாகும். 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டின் ஒன்பது மாத காலப்பகுதியில் மொத்த ஏனைய வருமானம் (Total other income) ரூபா 307 மில்லியன் அல்லது 38% குறைந்து ரூபா 501 மில்லியனை எட்டியுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM