(செ.சுபதர்ஷனி)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை சேவைகள் ஸ்தம்பித்திருந்த மஹியங்கனை ஆதார வைத்தியசாலை நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளது. எனினும் வெள்ளம் 5 அடிக்கு உயர்ந்தமையால் சிலாபம் வைத்தியசாலை மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளது.
மோசமான கால நிலையால் மஹியங்கனை ஆதார வைத்தியசாலை கடந்த சில தினங்களாக வெள்ள நீரில் மூழ்கியிருந்தது. வைத்தியசாலையின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதுடன், மின் துண்டிப்பு காரணமாக பெரும் அசௌகரியத்தை எதிர்க் கொண்டிருந்தனர். இந்நிலையில் வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகள் முழுமையாக ஸ்தம்பித்திருந்தது. வைத்தியசாலை நோயாளர் பிரிவுகளில் தங்கியிருந்த நோயாளர்கள் உடனடியாக பிபில ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
தற்போது நாட்டின் காலநிலை வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் மஹியங்கனை பகுதியில் வெள்ள நீர் வெளியேறியுள்ளமையால், நேற்று முதல் வைத்தியசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்கமைய வெளிநோயாளர் பிரிவுக்கு வருகைத் தந்திருந்த நோயாளர்களுக்கான சிகிச்சைகள் வழமைபோல் மேற்கொள்ளப்பட்டது. மேலதிக சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை அங்கிருந்து பிற வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. வைத்தியசாலைக்கான மின் இணைப்பும் சீரமைக்கப்பட்டுள்ளதுடன், நீர் விநியோகத்துக்கு தேவையான நடவடிக்கைளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்தோடு வெள்ள அனர்த்தத்தின் பின்னர் வைத்தியசாலையை தூய்மைப்படுத்தும் பணியில் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வைத்தியசாலைக்கு அவசியமான பொருட்களை விநியோகிப்பதற்கான ஒரு பாதை மாத்திரம் திறக்கப்பட்டுள்ளது. அத்தோடு சிறுநீரக நோயாளர்களுக்காக இரத்த சுத்திகரிப்பு சிகிச்சையும் திங்கட்கிழமை இடம்பெற்றது. இன்று (நேற்று) தெற்கில் இருந்து பதுளைக்கு சென்ற வீடுகள் மற்றும் நிறுவனங்களை தூய்மைப்படுத்தும் குழுவினர் கடமை முடியும் வரை அங்கு தங்கியிருப்பார்கள். பதுளை மாவட்டத்தில் உள்ள சகல சுகாதார நிறுவனங்களும் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளன.
மேலும் சிலாபம் வைத்தியசாலையில் 5 அடிக்கு அதிகமாக வெள்ள நீர் உயர்ந்துள்ளது. இதனால் வைத்தியசாலையின் 4 நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளன. நோயாளர்கள் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலைக்கு அருகில் இருக்கும் மக்கள் என 500 மேற்பட்டோர் குறித்த வைத்தியசாலையில் தங்கியுள்ளனர். இந்நிலையில் வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகள் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இரு பச்சிளம் குழந்தைகள், 8 சிறுவர்கள் மற்றும் அவர்களது தாய்மார் கொழும்பு சிறுவர் வைத்தியசாலை மற்றும் புத்தளம் வைத்தியசாலைக்கு ஹெலிக்கொப்டர் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு வெள்ள நீர் சற்று குறைந்த பின்னர் வைத்தியசாலையில் உள்ள நோயாளர்கள் கடற்படை மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் படகுகள் மூலம் குருநாகல் மற்றும் வாரியபொல ஆகிய வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளனர். கதரியல் பரிசோதனை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு என வைத்தியசாலையில் முக்கிய பிரிவுகள் நீரில் மூழ்கியுள்ளன.
வெள்ள நீர் வழிந்தோடியது பின்னர் வைத்தியசாலையை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதால், மறு அறிவிப்பு வரும் வரை வைத்தியசாலை பணிகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது. ஆகையால் நோயாளர்கள் சிலாபம் வைத்தியசாலைக்கு வருகைத் தருவதை தவிர்க்குமாறு வைத்தியசாலை நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை வெள்ளப்பெருக்கால் முல்லேரிய தேசிய மனநல மருத்துவமனையசிகிச்சை சேவைகள் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது. அவ்வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான சிகிச்சைகள் எவ்வித இடையூறும் இன்றி வழமைபோல் இடம் பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM