சட்ட விரோதமாக கடல் அட்டைகளை பிடித்த மூவரை வடக்கு கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இயந்திரப் படகு கடல் அட்டைகள் 578 கிலோ கிராம் மற்றும் நீர் மூழ்கி உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட மூவரையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.