மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - சசிகுமார் இணைந்து வெளியிட்ட 'ஆல் பாஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

01 Dec, 2025 | 06:13 PM
image

'ஈசன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி பிரபலமான நடிகர் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் கதையின் நாயகர்களில் ஒருவராக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஆல் பாஸ்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி மற்றும் நடிகர் சசிகுமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் மைதீன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆல் பாஸ்' எனும் திரைப்படத்தில் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், ஜனனி, ஜெயப்பிரகாஷ், செந்தி குமாரி, இயக்குநரும், நடிகருமான சுப்பிரமணிய சிவா, வினோதினி வைத்தியநாதன், பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா. ஆர், சத்யா, சரத் லோகித்ஸவா, 'அருவி' மதன், இயக்குநரும், நடிகருமான மூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தில் ராஜூ ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மோகனா . ஆர் தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' வன்முறை, அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம், துரோகம், பகை, கொலை ஆகியவற்றை தவிர்த்து யதார்த்த வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக வட சென்னையில் வாழும் மூன்று குடும்பங்களின் பாசம் -நட்பு -சந்தோஷம்- துக்கம் -என அவர்களின் நாளாந்த வாழ்வியலை உணர்வுபூர்வமாக விவரித்திருக்கிறோம்'' என்றார்.

இப்படத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு குடும்பத்தினரின் குழு புகைப்படம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளதால்  .. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

அத்துடன் கொரோனா தொற்று காலகட்டத்தில் பாடசாலையில் பயிலும் மாணவ மாணவிகளிடத்திலும் அவருடைய பெற்றோர்களிடத்திலும் பிரபலமான 'ஆல் பாஸ்' எனும் சொற்றொடரை படத்தின் தலைப்பாக சூட்டப்பட்டிருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிர்வாகம் பொறுப்பல்ல - திரைப்பட விமர்சனம்

2025-12-05 18:42:13
news-image

சா வீ - திரைப்பட விமர்சனம்

2025-12-05 18:38:02
news-image

சாரா - திரைப்பட விமர்சனம்

2025-12-05 18:31:33
news-image

அங்கம்மாள் - திரைப்பட விமர்சனம்

2025-12-05 18:27:55
news-image

நடிகை ரக்சிதா மகாலட்சுமி நடிப்பில் ஹாரர்...

2025-12-05 18:25:26
news-image

பிரம்மாண்டமான பொருட்செலவில் படமாக்கப்பட்ட 'நாக பந்தம்'...

2025-12-05 18:20:59
news-image

'இந்தியாவின் ஆன்மாவை- ஆன்மீகத்தை கொண்டாடும் படம்தான்...

2025-12-04 16:07:35
news-image

சுயாதீன இசை அல்பத்தை இயக்கி இயக்குநராக...

2025-12-04 16:03:52
news-image

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'ஓ.. சுகுமாரி'

2025-12-04 15:53:56
news-image

கிஷோர் நடிக்கும் 'மெல்லிசை ' படத்தின்...

2025-12-04 15:53:37
news-image

இயக்குநர் சுந்தர் சி வெளியிட்ட 'மாய...

2025-12-05 12:52:34
news-image

வித்தியாசமான கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும் நடிகர் ஸ்ரீகாந்தின் ...

2025-12-04 14:48:55