தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விக்ரம் பிரபு முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'சிறை' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'மன்னிச்சிரு..' எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிறை' எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு, எல். கே. அக்ஷய் குமார், அனீஸ்மா அணில் குமார், ஆனந்தா தம்பி ராஜா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித் குமார் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 25 ஆம் திகதி நத்தார் தினத்தன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ' உன் கோபத்தில் வானம் இப்போ செவக்குதடி செந்நிலவே என்னை மன்னிச்சிரு.. ' எனத் தொடங்கும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் ஜஸ்டின் பிரபாகரன் எழுத பின்னணி பாடகர் சத்ய பிரகாஷ் மற்றும் பின்னணி பாடகி ஆனந்தி ஜோஷி ஆகியோர் பாடியிருக்கிறார்கள். மெல்லிசையாகவும், இதமான தாள லயத்தின் பின்னணியிலும் ஒலிக்கும் இந்த பாடல் கதையின் சூழலை இயல்பாக பார்வையாளர்களுக்கு கடத்துவதால் விருப்பத்திற்குரிய பாடல்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM