நகைச்சுவை நட்சத்திரமாக பிரபலமாகி கதையின் நாயகனாக உயர்ந்த நடிகர் சதீஷ் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'முஸ்தபா முஸ்தபா' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'தாரா தாரா..' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகரும், பாடகரும் , இசையமைப்பாளருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் வெளியிட்டிருக்கிறார்..
இயக்குநர் பிரவீன் சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் 'முஸ்தபா முஸ்தபா ' எனும் திரைப்படத்தில் சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா, மானசா சவுத்ரி, கருணாகரன், புகழ், பவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எஸ். விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை தி மாபோகேஸ் கம்பனி எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரதீப் மகாதேவன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியாகி பெரும் வரவேற்பையும் கவனத்தையும் பெற்ற நிலையில் .. இப்படத்தில் இடம் பிடித்திருக்கும் 'ஹே தாரா தாரா தாரா நீ தான் என் டோரா..' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் நவீன் பாரதி எழுத, பின்னணி பாடகரும் , இசையமைப்பாளருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் மெல்லிசையாக உருவாகி இருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM