சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'கொம்பு சீவி' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

01 Dec, 2025 | 05:34 PM
image

நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கொம்பு சீவி' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' எனும் திரைப்படத்தில் சண்முக பாண்டியன், சரத்குமார், தார்னிகா, சுஜித் சங்கர், கல்கி, ஜார்ஜ் மரியான், கு. ஞானசம்பந்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான பொழுதுபோக்கு படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ் . செல்லையா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் பாடல்கள் - டீசர் ஆகியவை வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறி இருக்கும் தருணத்தில் இப்படம் எதிர்வரும் 25 ஆம் திகதியன்று நத்தார் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே சண்முக பாண்டியன் தமிழ் திரையுலகில் நட்சத்திர வாரிசாக அறிமுகமாகி ஒரு தசாப்தம் கடந்த நிலையில் இதுவரை எந்த ஒரு வணிக ரீதியான வெற்றி படத்தை வழங்கவில்லை என்பதும் இவருடைய நடிப்பில் உருவாகி இந்த ஆண்டில் வெளியான 'படைத்தலைவன்' எனும் திரைப்படம் - எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் 'கொம்பு சீவி: எனும் திரைப்படம் சரத்குமார் -பொன் ராம் -யுவன் சங்கர் ராஜா - ஆகியோர் கூட்டணி அமைத்திருப்பதால் வெற்றி பெறக் கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிர்வாகம் பொறுப்பல்ல - திரைப்பட விமர்சனம்

2025-12-05 18:42:13
news-image

சா வீ - திரைப்பட விமர்சனம்

2025-12-05 18:38:02
news-image

சாரா - திரைப்பட விமர்சனம்

2025-12-05 18:31:33
news-image

அங்கம்மாள் - திரைப்பட விமர்சனம்

2025-12-05 18:27:55
news-image

நடிகை ரக்சிதா மகாலட்சுமி நடிப்பில் ஹாரர்...

2025-12-05 18:25:26
news-image

பிரம்மாண்டமான பொருட்செலவில் படமாக்கப்பட்ட 'நாக பந்தம்'...

2025-12-05 18:20:59
news-image

'இந்தியாவின் ஆன்மாவை- ஆன்மீகத்தை கொண்டாடும் படம்தான்...

2025-12-04 16:07:35
news-image

சுயாதீன இசை அல்பத்தை இயக்கி இயக்குநராக...

2025-12-04 16:03:52
news-image

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'ஓ.. சுகுமாரி'

2025-12-04 15:53:56
news-image

கிஷோர் நடிக்கும் 'மெல்லிசை ' படத்தின்...

2025-12-04 15:53:37
news-image

இயக்குநர் சுந்தர் சி வெளியிட்ட 'மாய...

2025-12-05 12:52:34
news-image

வித்தியாசமான கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும் நடிகர் ஸ்ரீகாந்தின் ...

2025-12-04 14:48:55