பான் இந்திய நட்சத்திரமாக முன்னேறி இருக்கும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான 'ரெட்ட தல' எனும் திரைப்படத்தை நத்தார் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 25 ஆம் திகதியன்று வெளியாகும் என்பதை படக்குழுவினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரெட்ட தல' எனும் திரைப்படத்தில் அருண் விஜய் , சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், யோகி சாமி, ஜான் விஜய், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். எக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.
இதனிடையே இந்திய மதிப்பில் 30 கோடி ரூபாய் பட்ஜட்டில் அருண் விஜய் கதையின் நாயகனாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் 'ரெட்ட தல' எனும் திரைப்படம்- வணிக ரீதியாக வெற்றி பெறக் கூடும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM