(எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்)
நாட்டில் பாரிய அனர்த்தம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்கூட்டியே எங்களை எச்சரித்து இருந்தபோது, அதுதொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தவறி இருந்தது. முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால், 75வீதமான உயிர்களை பாதுகாத்திருக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பில் பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. அதில் நாட்டில் தற்போது இடம்பெற்றுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் இந்த சபையில் கதைப்பதற்கு எங்களுக்கு சிறியதொரு நேரம் வழங்கப்பட்டிருந்தது. நாட்டில் ஏற்பட்டுள்ள கவலையான நிலைமையில், எங்களுக்கு இங்கு விவாதிக்க தேவை இல்லை. என்றாலும் கொள்கை ரீதியில், இந்த அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர், வளிமண்டலவியல் திணைக்களம் இவ்வாறான ஒரு எச்சிக்கையை எங்களுக்கு விடுக்கும்போது, அதுதொடர்பில் இந்த பாராளுமன்றத்தில் நாங்கள் கலந்துரையாடி கொள்கை ரீதியிலான தீர்மானம் எடுக்காமையால் ஏற்பட்ட நட்டம் காணக்கூடியதாக இருக்கிறது.
அதனால் தொடர்ந்தும் நாங்கள் இந்த பாராளுமன்றத்தில் அடுத்த கட்டமாக நாங்கள் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கொள்கை ரீதியில் கலந்துரையாட எங்களுக்கு சந்தர்ப்பம் வழங்காவிட்டால், மேலும் நாங்கள் தவறிழைத்துக்கொள்ள பல இருக்கிறன்றன.பல உயிர்கள் நேற்றும் இல்லாமல் சென்றன. நாளையும் அது இடம்பெறலாம். அதனால் அடுத்த கட்டமாக நாங்கள் என்ற செய்ய வேண்டும் என ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பார்க்காமல் நாங்கள் ஒரு குழுவாக கலந்துரையாடாவிட்டால் அது நியாயம் இல்லை. அதனாலே நாங்கள் கலந்துரையாட சந்தர்ப்பம் கோரினாேம்.
ஆரம்பமாக இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைத்து எமது பிரஜைகளுக்கும் எமது அனுதாபத்தை, கவலையை தெரிவித்துக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு அரசாங்கம் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் எதிர்க்கட்சியாக நாங்கள் எமது ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறோம். தற்போதும் எதிர்க்கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம். ஆனால் பாராளுமன்றத்துக்கு வந்தால், இதனை மாற்றியமைத்துக்கொண்டு, இதனை அரசியல் என நினைத்து செயற்படுமாக இருந்தால், அது தவறு.
நவம்பர் 12ஆம் திகதியாகும்போது வளிமண்டலவியல் திணைக்களத்தினால், இவ்வாறான மிகவும் ஆபத்தான நிலைமை ஏற்படும் என எங்களை எச்சரித்திருந்தது. பொதுவாக அவ்வாறான நிலைமை ஏற்படும்போது, எமது நீர் நிலைகளில் இருந்து, தண்ணீரை படிப்படியாக குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கிறோம். அது பொதுவான இயல்பாகும். ஏனெனில் ஒரு வாரத்தில் பாரிய மழை வீழ்ச்சி ஏற்படும் என நினைத்து வான் தகவுகளை திடீரென திறந்தால், மக்கள் மூழ்கிவிடுவார்கள்.ஆனால் கடைசி நேரம் வரை நீர் நிலைகளின் நீரை திறந்துவிட வில்லை. கொத்மலை நீர் தேக்கத்தை ஒரே தடவையில் திறந்ததால், கம்பொளை நகரம் முற்றாக நீரில் மூழ்க்கியது. அதனால் ஆயிரம் பேர் வரை மரணித்திருப்பார்கள். 12ஆம் திகதியில் இருந்து, நீரை படிப்படியாக விடுவித்திருந்தால், இந்த உயிர்களில் நூற்றுக்கு 75வீதமாவது பாதுகாத்துக்கொள்ள முடிந்திருக்கும். இது தொடர்பில் நாங்கள் இந்த சபையில் கதைத்திருக்கலாமே.
இவ்வாறான அன்ர்த்தங்கள் தொடர்பில் எங்களுக்கு அனுபவம் இருக்கிறது. 2016ஆம் ஆண்டில் இவ்வாறான அனர்த்தம் ஒன்று ஏற்பட்டது.தெதுறு ஓயாவை ஒரே தடவையில் திறந்துவிட்டார்கள். இதனால் அனியாயமாக பல உயிர்களை இழந்தோம். இவ்வாறான அனர்த்தங்களை தடுப்பதற்கு அரசாங்கம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. அரசாங்கத்துக்கு தவறு ஏற்பட்டிருந்தால், அதுதொடர்பில் வெட்கப்பட தேவையில்லை. இதன் பின்னராவது,இதனை சரி செய்துகொள்ள, நாங்கள் நாடு என்றவகையில் ஒன்றாக செயற்படுவோம். மக்கள் சாப்பிட உணவின்றியும் தங்களது வீடுகளுக்கு செல்ல வழியின்றியும் தவித்து வருகின்றனர்.அதுதொடர்பில் நாள் முழுவதும் சொல்லிக்கொண்டு போகலாம். அதனால் இதற்கு கொள்கை ரீதியில் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.
அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் தொடர்பில் கலந்துரையாட எங்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதில்லை என்றாரல், தொடர்ந்தும் இந்த சபையில் இருப்பதில் பயனில்ல என்பதை கவலையும் தெரிவித்துக்கொண்டு, பாதிக்கப்பட்டிருக்கும் எமது மக்களுக்கு உதவி செய்ய நாங்கள் செல்கிறோம் என்றார்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM