இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் அதிகாரிகள் இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவுடன் இராணுவ தலைமையகத்தில் வைத்து சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இக் குழுவில் பங்களாதேஷைச் சேர்ந்த 21 இராணுவ அதிகாரிகளும் 2 கடற்படையினரும் ஒரு விமானப்படை அங்கத்தவரும் 5 சிவில் பாதுகாப்பு மற்றும் மீளாய்வு பீடத்தின் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இக் குழுவினருக்கு இராணுவத் தளபதி நினைவுச் சின்னங்களை வழங்கி கௌரவித்தார்.

மேலும் இச் சந்திப்பின் போது இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயசுந்தர மற்றும் இராணுவப் பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜி.வி.ரவிப்பிரிய ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தேசிய பாதுகாப்பு கல்லூரி குழுவினருக்கு பிரிகேடியர் ஜயந்த குணரத்ன, இலங்கையின் கடந்த கால யுத்த சூழல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விளக்கங்களை வழங்கினார்.