( நமது நிருபர்)
மோசமான வானிலையால் பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலன் விசாரிப்பதற்காகவும் அனர்த்த மீட்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர சனிக்கிழமை விஜயம் செய்திருந்தார்.
பிரதி அமைச்சர் ஹப்புத்தளை கிலெநோர் தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள போவே வித்தியாலயத்துக்கும் விஜயம் செய்தார்.
அங்குள்ள வசதிகளை ஆய்வு செய்திருந்ததுடன், அத்தியாவசிய சேவைகள், தங்குமிடம், மருத்துவ உதவி, உணவு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்ததுடன் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களின் நலன் தொடர்பிலும் விசாரித்தார்.
கடந்த நவம்பர் 28 அன்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள பதுளை முத்தியங்களை விகாரை, பதுளை நகர முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் நெலும்கமுவ மகா வித்யாலயத்திற்கும் விஜயம் செய்தார்.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்காகவும் கெப்பெட்டிப்பொலையில் நிகழ்ந்த நிலச்சரிவு உட்பட்ட இடத்தையும் பிரதி அமைச்சர் பார்வையிட்டார்.
அத்துடன் அங்கு நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் அறிவுறுத்தினார். பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக அனர்த்த முகாமைத்துவ குழுக்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடையே ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM