புத்த பெரு­மானின் பிறப்­பி­ட­மான லும்­பி­னியை பாது­காப்­ப­தற்கு ஜப்­பா­னுக்கு அடுத்து படி­யாக  முதற்­த­ட­வை­யாக நேபா­ளத்­திற்கு இலங்கை 15 கோடி ரூபா நிதி உதவி செய்­ய­வுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். 

பெளத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கி­னாலும் எம்­மிடம் இன­வாதம் இல்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

நாட­ளா­விய ரீதியில் உள்ள 150 விகா­ரை­களை புனர்நிர்­மாணம் செய்­வ­தற்­கான நிதி உதவி வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளி­கையில் நடை­பெற்­றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,

அர­சாங்கம் என்ற வகையில் நாட்டில் உள்ள தொல்­பொ­ரு­ளியல் சார்ந்த இடங்­க­ளையும் விகா­ரை­க­ளையும் பாது­காப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இது அர­சாங்­கத்தின் பாரிய பொறுப்பும் கட­மை­யுமாகும்.இதன் அடிப்­ப­டை­யி­லேயே 150 விகா­ரை­களை புனர் நிர்­மாணம் செய்­வ­தற்­கான பணி­களை ஆரம்­பித்­துள்ளோம். இந்த நட­வ­டிக்­கைகள் தொடரும். அர­சர்­களை போன்று பெளத்த விகா­ரை­களை புனர்நிர்­மாணம் செய்­ய­வுள்ளோம். நான் பிர­த­ம­ராகும் வரைக்கும் விகா­ரை­களின் புனர்நிர்­மாண விவ­கா­ரத்தில் எந்­த­வொரு நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்கவில்லை. 

இந்­நி­லையில் உலகில் தற்­போது பெளத்த தர்­மத்தை பாது­காக்கும் முக்­கிய நாடு இலங்­கை­யாகும். பெளத்த தர்­மத்தை பாது­காத்து கொடுத்­ததும் இலங்­கை­யாகும். இல்­லையேல் மியன்மார் உள்­ளிட்ட நாடு­களின் நிலைமை என்­ன­வாகும். ஆகவே பெளத்த தர்­மத்தை பாது­காக்க உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். நான் பல இடங்­க­ளுக்கு பயணம் செய்த போது விகா­ரை­களின் உண்­மை­யான நிலை­மையை அறிந்து கொண்டேன். புன­ர­மைப்­ப­தற்கு உரிய நிதி இல்­லாமல் பல விகா­ரை­களின் நிர்­வாகங்கள் கஷ்­டப்­ப­டு­கின்­றன. இதனை கருத்­திற்­கொண்டே இந்த நட­வ­டிக்­கையை எடுத்தோம். 

எவ்­வா­றா­யினும் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரி­மையை நாம் தொடர்ந்து பாது­காப்போம். அதே­போன்று நாட்டில் உள்ள ஏனைய மதங்­களில் உரி­மை­களை பாது­காப்போம். இந்த நிகழ்வில் கிறிஸ்­தவ மத விவ­கார அமைச்சர் ஜோன் அம­ர­துங்­கவும் இந்து மத விவ­கார அமைச்சர் டி.எம் சுவா­மி­நா­தனும் இங்கு வந்­த­மையை­யிட்டு நான் மகிழ்ச்சி அடை­கின்றேன். பெளத்த மத முன்­னு­ரி­மையை பாது­காப்போம். அதற்கு மாறாக இன­வாதம் எம்­மிடம் இல்லை. 

பெளத்த மத முன்­னு­ரி­மையை பாது­காக்கும் அதேநேரம் மறு­பு­றத்தில் இன நல்­லி­ணக்­கத்­திற்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செற்­ப­டுவோம். அத்­துடன் விகா­ரை­களின் புனர் நிர்­மா­ணத்தின் போது தலதா மாளி­கையின் தங்­கத்­தி­லான கூரையை ஆர்.பிரே­ம­தாச நிர்­மா­ணித்தார். எனவே தற்­போது அதனை புனர் நிர்­மாணம் செய்ய திட்­ட­மிட்­டுள்ளோம்.

மேலும் நேபா­ளத்தில் அமைந்துள்ள புத்த பெருமானின் பிறப்பிடமான லும்பினிக்கு ஜப்பான் நிதி உதவி செய்தது. இந்நிலையில் ஜப்பானுக்கு பதிலாக முதற்தடவையாக நாம் 15 கோடி ரூபாவை அடுத்த வருடம்   வழங்கவுள்ளோம். அதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித் துள்ளோம் என்றார்.