கிளிநொச்சி மாவட்டத்தில் சீரான நீர் விநியோக நடவடிக்கையினை மேற்கொள்வதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது எனவும் இதனால் பொது மக்கள் நீரை சிக்கனமாகவும், கொதிக்கவைத்தும் பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் அறிவித்துள்ளனர்.
தற்போது ஏற்பட்ட காலநிலை அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி குளத்தின் நீர் என்றுமில்லாத அளவுக்கு மிகவும் அதிகரித்த கலங்கல் தன்மையுடன் காணப்படுவதனால் நீரை சுத்திகரித்து விநியோகிப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
அத்தோடு, அவ்வவ்போது ஏற்படுகின்ற மின்சார தடையும் நீர் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இருப்பினும் இயன்றளவு நீரை சுத்திகரித்து வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் அவை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்படும்.
எனவே பொது மக்கள் நீரை சிக்கனமாகவும், கொதிக்கவைத்தும் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM