இரணைமடு குளம்: நீர்மட்டம் குறைந்ததால் வான்கதவுகள் படிப்படியாக மூடப்படுகின்றன

Published By: Digital Desk 1

30 Nov, 2025 | 11:35 AM
image

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாலும், நீர் வரும் வீதம் தணிந்துள்ளதாலும் குளத்தின் கீழ்ப்பகுதியிலுள்ள வயல் நிலங்களைப் பாதுகாக்கும் நோக்கில், குளத்தின் வான்கதவுகளைப் படிப்படியாக மூடுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள 54 நீர்ப்பாசனத் திட்டங்களில், இன்று ஞாயிற்றுக்கிழமை (30)  காலை மேற்கொள்ளப்பட்ட அவதானிப்பின் படி 51 குளங்கள் வான் பாயும் நிலையில் உள்ளன.

நேற்று சனிக்கிழமை (29) நண்பகல் 40'-3' அடியாகக் காணப்பட்ட இரணைமடு குளத்தின் நீர்மட்டம், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் 37'-5' அடியாகக் குறைவடைந்துள்ளது. 

குளத்துக்கான நீர் உள்வரும் வீதம் மணித்தியாலத்துக்கு 2.173 மில்லியன் கன மீற்றராகக் குறைவடைந்துள்ளதுடன், வெளிச்செல்லும் வீதம் 2.876 மில்லியன் கன மீற்றராகக் காணப்படுகின்றது. நீரேந்து பரப்பில் பெய்த மழையால் இன்னும் அண்ணளவாக 27 மில்லியன் கன மீற்றர் நீர் குளத்துக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிகமான மழைவீழ்ச்சி மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சில குளங்களின் வான்கதவுகள் உடைப்பெடுத்துள்ளன:

அதன்படி,

வவுனியா - பம்பைமடு, வவுனிக்குளம், மகாகச்சகொடிய

முல்லைத்தீவு -: முத்துஐயன்கட்டு

கிளிநொச்சி - இரணைமடு.

இதேவேளை, குளங்கள் உடைப்பெடுப்பதைத் தடுப்பதற்காகப் குளங்களின் வால்கட்டுப் பகுதிகள் திட்டமிடப்பட்ட வகையில் வெட்டப்பட்டு நீர்மட்டம் குறைக்கப்பட்டுள்ளது

அதன்படி,

வவுனியா - கல்மடு, பெரியதம்பனை, அலியாமருதமடு, கனகராயன்குளம்.

மன்னார் - பெரியமடு.

கிளிநொச்சி - புழுதியாறு.

முல்லைத்தீவு - வவுனிக்குளம், உடையார்கட்டு, தட்டயர்மலை.

அத்துடன், மன்னார் மாவட்டத்திலுள்ள வெலிமருதமடு குளம் மற்றும் கூராய்க்குளம் என்பன உடைப்பெடுத்துள்ளன. தொலைத்தொடர்பு மற்றும் மின்சாரத்தடை காரணமாக முழுமையான விபரங்களைப் பெற முடியவில்லை எனினும், நிலைமைகளைக் கையாள்வதற்காக வவுனியா மற்றும் மாங்குளம் பகுதிகளிலிருந்து பொறியியலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தொண்டைமானாறு, அரியாலை, அராலி ஆகிய உவர்நீர்த்தடுப்பணைகளை ஒட்டிய கடல் மட்டமானது 3 அடி 6 அங்குலத்திலிருந்து 3 அடியாகக் குறைந்துள்ளதால், வான்கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழைய பிணக்குகளை மறந்து ஒற்றுமையுடன் புதிய...

2026-04-12 15:15:38
news-image

கடல் அட்டை பிடித்த 06 பேர்...

2026-04-12 15:03:40
news-image

இயற்கை அழகுசாதனப் பொருட்கள் என கூறி...

2026-04-12 14:59:21
news-image

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம்...

2026-04-12 14:50:41
news-image

மின்சார சபை ஊழியர்களுக்கு உரிய இழப்பீட்டுத்...

2026-04-12 14:32:14
news-image

நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்! - தையிட்டி...

2026-04-12 13:19:33
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள...

2026-04-12 13:18:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக” வேலைத்திட்டம் :...

2026-04-12 13:15:55
news-image

மட்டக்களப்பில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு: உற்சாகத்தில்...

2026-04-12 12:42:32
news-image

சட்டவிரோத பஸ் போக்குவரத்து: கொழும்பில் 07...

2026-04-12 12:18:38
news-image

புத்தளத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-04-12 11:42:41
news-image

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு : ஒரே...

2026-04-12 11:29:19