பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தம் 

30 Nov, 2025 | 07:12 PM
image

சீரற்ற வானிலையால் பேராதனை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு முதலான அனர்த்தங்கள் காரணமாக பல்கலைக்கழக நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த வியாழக்கிழமை (27) மாலை பல்கலைக்கழக உபவேந்தர் வெளியிட்ட அறிவிப்பின்படி, வெள்ளிக்கிழமை (28) முதல் பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. 

அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வரவேண்டும் எனவும் உபவேந்தரால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போதும் அந்நிலை தொடர்கிறது. 

மேலும், தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக பல்கலைக்கழக வளாகம் உட்பட பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக, நிர்வாக பீடத்தின் பீடாதிபதி அலுவலகத்தில் கதிரைகள், தளபாடங்கள், கணினிகள் முதலானவை சேதமடைந்துள்ளன. 

அத்துடன் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கும் விடுதிகளும் நீரில் மூழ்கியுள்ள நிலையில் மாணவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிராண்ட்பாஸில் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

2026-09-08 09:20:15
news-image

விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்றம்...

2026-09-08 09:01:06
news-image

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்...

2026-09-08 08:32:24
news-image

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை...

2026-09-07 12:33:54
news-image

இன்றைய வானிலை 

2026-09-08 06:30:43
news-image

பஸ் லலித் வழங்கிய தகவலுக்கமைய ஹங்வெல்ல...

2026-09-08 06:28:10
news-image

இரண்டாம் உலகப் போரின் பின்னர் அண்மையகாலத்தில்...

2026-09-08 06:17:18
news-image

மூதூரில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு சக்கர...

2026-09-08 06:14:40
news-image

22 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம்...

2026-09-08 06:03:38
news-image

‘சிரிலிய சவிய’ கணக்கில் ஒரு மில்லியன்...

2026-09-08 05:45:33
news-image

மட்டக்களப்பு ஊழல் மோசடி தொடர்பாக இன்னாள்...

2026-09-08 05:39:50
news-image

எரிமலைச் சாம்பல் காரணமாக ஜகார்தாவுக்கான விமான...

2026-09-08 01:09:31