மரக்கறிகளின் விலை பாரிய அளவில் அதிகரிப்பு

19 Nov, 2015 | 10:59 AM
image

(க.கிஷாந்தன்)

நாட்டில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இதனால் மலையகம் மற்றும் மட்டக்களப்பில் மரக்கறிகளின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். 
இக்காலப்பகுதியில் மரக்கறி வகைகளின் விலை வீழ்ச்சி காணப்பட்டிருக்கும் ஆனால். இந்த வருடத்தில் இவ்வாறு மரக்கறி வகைகள் விலை அதிகரிப்பால் மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். 


மலையகம் மற்றும் மட்டக்களப்பு விவசாயிகளினால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், நாட்டில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின் காரணமாக குறித்த மரக்கறிகள் அழுகி போவதற்கான ஆபத்து உள்ளதாக இப்பகுதி விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் குறித்த நிலை தொடர்ந்து நீடிப்பதன் காரணமாக தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலை குறிப்பிட்டளவு உயர்ந்துள்ளது. தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்குமாயின் மேலும் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த வகையில் மலையகத்தில் விற்கப்படும் சில மரக்கறிகளின் தற்போதைய விலை


லீக்ஸ் ஒரு கிலோ - 160 ரூபா 
பாவக்காய் ஒரு கிலோ - 200 ரூபா 
வெண்டிக்காய் ஒரு கிலோ - 120 ரூபா 
புடலங்காய் ஒரு கிலோ - 120 ரூபா 
தக்காளி ஒரு கிலோ - 120 ரூபா 
கோவா ஒரு கிலோ - 140 ரூபா 
கறிமிளகாய் ஒரு கிலோ - 320 ரூபா 
கத்திரிக்காய் ஒரு கிலோ விலை - 120 ரூபா 
போஞ்சி ஒரு கிலோ - 240 ரூபா 
பச்சை மிளகாய் ஒரு கிலோ விலை - 1000 ரூபா 
கரட் ஒரு கிலோ - 180 ரூபாவிலிருந்து 200 ரூபா வரை விற்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09