நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களில் உள்ள 93 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் நீடித்துள்ளது.
அதன்படி, பதுளை மாவட்டத்தில் உள்ள ஊவா பரணகம, ஹப்புத்தளை, பண்டாரவளை, ஹாலி எல, பதுளை, லுனுகல, பசறை, மீகஹகிவுல, சொரணத்தொட்ட, வெலிமட, எல்ல, கந்தெகெட்டிய மற்றும் ஹல்துமுல்ல.ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்டி மாவட்டத்தில் பன்வில, பததும்பர, கங்கை இஹல கோரளை, உடுநுவர, தோலுவ, பூஜாபிட்டிய, மினிபே, கங்காவட கோறளை, அக்குரணை, பஸ்பாகே கோரளை, ஹதரலிய, தபரஹெடும்ப, ஹரிஸ்பத்ஹெதும்ப, உடபலத, குண்டசாலே, யட்டிநுவர, தோல்தொட்ட மற்றும் மெடதும்பர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தில் ரம்புக்கனை, மாவனெல்ல, தெரணியகல, யட்டியந்தோட்டை, கலிகமுவ, வரக்காபொல, ருவன்வெல்ல, அரநாயக்க, கேகாலை, புலத்கொ{ஹபிட்டிய மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பிரதேசங்களுக்கும், பொல்கஹாவெல, அலவ்வ, நாகமால, மாவத்தை, நாகமால ஆகிய பிரதேசங்களுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ, அம்பங்கங்க கோரளை, பல்லேபொல, உக்குவெல, நாவுல, லக்கல-பள்ளேகம, யடவத்த, ரத்தோட்ட மற்றும் மாத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், பிபில மற்றும் மெதகொட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குரன்கெத்த, மதுரத்தை, நுவரெலியா, கிழக்கு கொத்மலை, மேற்கு கொத்மலை, தலவாக்கலை, நோர்வூட், அம்பகமுவ, நில்தண்டஹின்ன மற்றும் வலப்பனை மற்றும் கலவான, குருவிட்ட, கொடகவெல, அயகம, எலபத்த, ஆகிய இடங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை, இம்புல்பே, பெல்மடுல்ல, கிரியெல்ல, இரத்தினபுரி மற்றும் எஹலியகொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கம்பஹா மாவட்டத்தில் உள்ள அத்தனகல்ல பிரதேச செயலகப் பிரிவுக்கும், கொழும்பு மாவட்டத்தில் உள்ள சீதாவக்க மற்றும் பாதுக்க பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், களுத்துறை, காலி, மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள 31 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM