நடிகர் சக்தி வாசு மற்றும் நடிகை சிந்தியா லூர்து ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ' அனலி' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநர்கள் வெங்கட் பிரபு - கணேஷ் கே. பாபு ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் தினேஷ் தீனா இயக்கத்தில் உருவாகி வரும் 'அனலி' எனும் திரைப்படத்தில் சிந்தியா லூர்து, சக்தி வாசு, கபீர் துஹான் சிங், அபிஷேக் அயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சிந்தியா புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், நடிகையுமான சிந்தியா லூர்து தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் நாயகனும், நாயகியும் ஆக்ஷன் அவதாரத்தில் தோன்றுவது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
இதனிடையே தயாரிப்பாளரும் நடிகையுமான சிந்தியா லூர்து இதற்கு முன் ' வர்ணாசிரமம்' மற்றும் 'தினசரி' ஆகிய படங்களை தயாரித்து கதையின் நாயகியாக நடித்திருந்தார் என்பதும், அவர் தற்போது எக்சன் நாயகியாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM