நடிகர் சிவக்குமாருக்கு 'கௌரவ கலாநிதி' பட்டம் வழங்கி சிறப்பித்த தமிழக முதல்வர்

29 Nov, 2025 | 05:17 PM
image

தமிழ் திரையுலகில் நட்சத்திர நடிகராகவும்... ஓவியராகவும்... பக்தி இலக்கிய சொற்பொழிவாளராகவும்.. தொடர்ந்து சேவையாற்றி வரும் நடிகர் சிவகுமாருக்கு தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் 'கௌரவ கலாநிதி' பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.

திரையுலக பயணத்தில் மட்டுமல்லாமல் அக வாழ்க்கையிலும் நேர்மையையும், சுய ஒழுக்கத்தையும் கடைப்பிடித்து இன்று வரை அறிமுகமாகும் புதுமுக நடிகர்களுக்கு முன்னுதாரண நட்சத்திரமாக மின்னும் 84 வயதான சிவக்குமாரின் சாதனை பட்டியல் நீளமானது.

1965 ஆம் ஆண்டில் 'காக்கும் கரங்கள்'  படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சிவக்குமார் தொடர்ந்து 'அன்னக்கிளி', 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி', 'சிந்து பைரவி', 'அவன் அவள் அது', :அக்னி சாட்சி' என ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இதற்கு முன்பாகவே 'சரஸ்வதி சபதம்', 'கந்தன் கருணை', 'திருமால் பெருமை' உள்ளிட்ட சமூக பக்தி படங்களில் இறைவனின் திருவுருவத்தில் தோன்றி  ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார்.

இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுக்காக 'காதலுக்கு மரியாதை', 'சேது', 'பூவெல்லாம் உன் வாசம்' ஆகிய படங்களிலும் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியவர்.

'சித்தி', 'அண்ணாமலை' எனும் சின்னத்திரையில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் பங்களிப்பு செய்து சின்னத்திரை ரசிகர்களிடமும் பிரபலமானவர்.

வெள்ளித்திரை- சின்னத்திரை என இரண்டு திரையிலும் 2008 ஆம் ஆண்டுடன் தன்னுடைய திரையுலக பணியில் இருந்து விடை பெற்ற சிவக்குமார் .. தன் மனதிற்கு இனிய விடயங்களில் கவனம் செலுத்தினார்.

இது தொடர்பாக அவர் ஒரு நேர்காணலில் ''தமிழ் இலக்கியத்தின் மீதான எம்முடைய ஈடுபாட்டை அடுத்த தலைமுறையினருக்கும் உரைத்திட வேண்டும் என்ற அவா எம்முள் இருந்தது. தமிழ் இலக்கியத்தின் முக்கியத்துவத்தை... அதன் மீதான ரசனையை வளர்த்திட செய்ய வேண்டும் என்பதற்காக இலக்கியம்- ஆரோக்கியம்- இல்லறம்- ஆகிய பிரிவுகளில் இளைய தலைமுறையினரிடம் சொற்பொழிவாற்ற தீர்மானித்தேன். இரண்டு இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டையும் இன்றைய இளம் தலைமுறையினருக்கேற்ற வகையில் சுருக்கமான வடிவத்தில் வழங்க வேண்டும் என தீர்மானித்தேன். அதேபோல் உலக பொதுமறையான திருக்குறளையும் அவர்களிடத்தில் சேர்ப்பித்திட வேண்டும் என்பதற்காக தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டேன்'' என குறிப்பிட்ட சிவக்குமாரின் கடுமையான உழைப்பிற்கும், தமிழ் இலக்கியத்திற்கு அவர் செய்து வரும் தொடர் தொண்டின் காரணமாகவும் சென்னையில் இயங்கி வரும் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்வில் தமிழக முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி சிவக்குமாருக்கு கௌரவ கலாநிதி பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.

இதனிடையே நடிகர் சிவக்குமார் மேடையில் சொற்பொழிவாற்றும் போது குறிப்புகளை பார்த்திடாமல்..  மொழிக்குரிய ஓசை நயத்துடன் ... இடைநிறுத்தம் ஏதுமில்லாமல் பேசுவது அவருடைய தனித்துவமான பாணி என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் விமல் - ஸ்ரேயா சரண்...

2026-09-15 15:08:53
news-image

நடிகை அஞ்சலி நாயரின் நடனத்தில் வெளியான...

2026-09-15 15:08:29
news-image

நடிகர் 'சியான்' விக்ரம் நடிக்கும் :'பவர்...

2026-09-15 14:59:36
news-image

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் 'தி கிராண்ட்...

2026-09-15 14:58:32
news-image

நடிகை கோமலீ பிரசாத் நடிக்கும் 'மண்ட...

2026-09-15 14:46:21
news-image

ராஷ்மிகா மந்தானா நடிப்பில் திரைப்படமாகும் 'பாரத...

2026-09-15 14:46:05
news-image

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தனி முத்திரை...

2026-09-15 14:43:55
news-image

கடலோர பாதுகாப்புப் பகுதிகளில் உள்ள சட்டவிரோத...

2026-09-14 16:24:05
news-image

இசைஞானி இளையராஜாவின் ஆசிர்வாதத்துடன் தொடங்கிய 'ராவணன்...

2026-09-14 15:19:33
news-image

துருவ் விக்ரம் நடிக்கும் 'ஜாக்கி' படத்தின்...

2026-09-14 15:19:03
news-image

நடிகை ரைசா வில்சன் நடிக்கும் 'நோவா:...

2026-09-14 15:18:50
news-image

நாட்டார் கதையை பின்னணியாக கொண்ட 'தி...

2026-09-14 15:18:29