வேகமான காற்று வீசுகை மற்றும் சற்று கனமழை, அச்சமடைய தேவையில்லையெனவும் இன்று இரவுடன் இந்த வானிலை நிலைமையும் சீரடைந்து விடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.
29.11. 2025 சனிக்கிழமை மாலை 4.45 மணி நிலைவரப்படி, வேகமான காற்று வீசுகை மற்றும் சற்று கனமழை, அச்சமடைய தேவையில்லையெனவும் இன்று இரவுடன் இந்த வானிலை நிலைமையும் சீரடைந்து விடும்.
டிட்வா புயலின் உள்வளையத்தின் பின் பகுதி கடலினுள் சென்று கொண்டிருக்கின்றது. அதனால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னாரில் காற்று சற்று வேகமாக வீசுகின்றது. சற்று கனமழையும் கிடைத்து வருகின்றது.
இது புயலின் ஆற்றல் மிக்க உள்வளையம் கடலுக்கு செல்வதன் விளைவே இந்த வேகமான காற்று வீசுகை மற்றும் சற்று கனமழை.
அச்சப்பட எதுவமில்லை. ஆனால் ஏற்கெனவே மண் நெகிழ்வான நிலையில் இருப்பதனால் மரங்கள் பாறி விழக்கூடும். மின் கோபுரங்கள் சரிந்து மின் வடங்கள் அறுந்து விழக்கூடும். ஆகவே இவை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.
இன்று இரவுடன் இந்த வானிலை நிலைமையும் சீரடைந்து விடும் என நாகமுத்து பிரதீபராஜா மேலும் தெரிவித்தார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM