மாந்தி தோஷம் விலகுவதற்கான பிரத்யேக வழிமுறை..!?

29 Nov, 2025 | 05:08 PM
image

எம்மில் பலருக்கு தகுதியும், திறமையும் இருந்தும் பொருத்தமான வாய்ப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். சிலருக்கு நிம்மதி என்பது இல்லாமல் இருக்கும். அதனைத் தொடர்ந்து வீண் செலவு -கண் பாதிப்பு -தீய பழக்க வழக்கம் - போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

வேறு சிலருக்கு வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றாலும், அடிக்கடி சுகவீனம் ஏற்படும். தாயாருடன் கருத்து வேறுபாடு அடிக்கடி நிகழும். இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படுவதற்கு எம்முடைய ஜாதகத்தில் உள்ள மாந்தி தோஷமே முதன்மையான காரணமாகும்.  இத்தகைய தோஷத்தை நிவர்த்தி செய்வதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில பிரத்யேகமான வழிமுறையை குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் : பசும்பால், ஏலக்காய்

திங்கட்கிழமையைத் தெரிவு செய்து கொண்டு அன்று அதிகாலையில் பசு மாட்டிலிருந்து கறந்த பாலில் சிறிதளவு ஏலக்காயை பொடித்து அதில் வைத்து குளியல் அறைக்கு எடுத்துச் சென்று உங்கள் தலை முதல் கால் வரை இந்த பிரத்யேக பசும்பாலில் உங்களது உடலை ஊற வைக்க வேண்டும். சில நிமிடங்கள் ஆவது அந்தப் பால் உங்களுடைய தலையில் இருந்து பாதம் வரை இருந்திட வேண்டும். அதன் பிறகு நீங்கள் வழக்கம் போல் நீராடலாம். இதனை திங்கட்கிழமைகளில் மட்டும்தான் மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்களுக்கு சௌகரியமான நாளில் இதனை மேற்கொண்டாலும்... உங்களிடம் சூட்சமமாக மறைந்திருக்கும் மாந்தி தோஷம் விலகி, உங்களுக்கு இந்த பிறவியில் கிடைக்க வேண்டிய சுப பலன்கள் எந்தவித தடையும் இன்றி கிடைக்கும்.

தொகுப்பு : சுபயோக தாசன்‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விற்காத காணியை விற்பனை செய்வதற்கான சூட்சும...

2026-01-12 15:53:56
news-image

குலதெய்வத்தின் அருளை எளிதாக பெறுவது எப்படி...?

2026-01-10 17:59:12
news-image

தன வரவு தொடர்ந்து அதிகரிக்க....!!?

2026-01-09 17:38:45
news-image

சூரிய பகவானின் அருள் கிடைப்பதற்கான சூட்சம...

2026-01-08 15:21:13
news-image

விரக்தி நிலையில் இருந்து விடுபடுவதற்கான பிரத்யேக...

2026-01-07 16:41:49
news-image

சித்தர்கள் ‘உயிர்’ன்னு சொன்னதை நாம ‘மூச்சு’ன்னு...

2026-01-06 17:18:11
news-image

கடன் சுமை குறைவதற்கான பிரத்யேக வழிபாடு..!?

2026-01-05 17:00:09
news-image

பித்ருக்களின் சாபத்தை நீக்குவதற்கான எளிய வழிமுறை

2026-01-03 16:03:58
news-image

தங்கம் தங்குவதற்கான சில சூட்சம குறிப்புகள்..!?

2026-01-02 15:52:58
news-image

இந்த புத்தாண்டிற்கான பிரத்யேக வழிபாடு

2026-01-01 16:02:44
news-image

தன வரவை மேம்படுத்துவதற்கான மந்திர வழிபாடு..!?

2025-12-31 17:22:30
news-image

சனி பெயர்ச்சி பலன்கள் - 2026

2025-12-30 18:27:23