அரி­சிக்­கான  அதி­க­பட்ச  சில்­லறை விலை நிர்­ண­யத்தை  தற்­கா­லி­க­மாக நீக்­கு­வ­தற்கு  அமைச்­ச­ரவை  தீர்­மா­னித்­துள்­ளது. 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் நேற்று காலை  ஜனா­தி­பதி செய­ல­கத்தில் அமைச்­ச­ரவைக் கூட்டம்  இடம்­பெற்­றது.  இந்­தக்­கூட்­டத்தில்   அரிசி இறக்­கு­மதி தொடர்பில்  கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.  இத­னை­ய­டுத்து அரி­சிக்­கான அதி­க­பட்ச சில்­ல­றை­வி­லையை தற்­கா­லி­க­மாக    நீக்­கு­வது என்றும்  அதன் மூலம்  கிடைக்கும் பலா­ப­லன்­களைப் பார்த்து   சில மாதங்­களின் பின்னர் உறு­தி­யான முடிவு எடுப்­பது என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 

அரி­சிக்­கான அதி­க­பட்ச சில்­லறை விலை நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ள­மை­யினால் அரி­சியை இறக்­கு­மதி செய்­ப­வர்­களின்  தொகை குறை­வ­டைந்­துள்­ள­தாக  இங்கு  சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.  இதனையடுத்தே  இந்த   விலை நிர்ணயத்தை தற்காலிகமாக   நீக்குவதற்கு  முடிவு செய்யப்பட்டுள்ளது.