டிட்வா புயல் : இலங்கையை விட்டு இன்றுடன் முழுமையாக விலகும் - நிலைவரங்கள் எப்படி அமையும் !

29 Nov, 2025 | 08:32 AM
image

டிட்வா புயல் 29.11.2025 சனிக்கிழமை காலை 8.00 மணி நிலைவரப்படி, ஏற்கனவே குறிப்பிட்டவாறு தற்போது சுண்டிக்குளத்தில் மையம் கொண்டு கடலுக்குள் சென்று கொண்டிருக்கின்றது.  (காலை 8.00 மணி) மையத்தின் 30 வீதமான பகுதி கடலுக்குள் சென்றுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.

டிட்வா புயல் இன்று நண்பகலளவில் முழுமையாக கடலுக்குள் சென்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பேரழிவுகளை ஏற்படுத்திய டிட்வா புயல் இன்றுடன் முழுமையாக இலங்கையை விட்டு விலகும். 

இன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தின் மேற்கு பகுதிகள் சற்று கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது. 

வடக்கு மாகாணத்தின் குளங்களுக்கு இன்றும் அதிக நீர்வரத்து இருக்கும். ஆகவே பெருநிலப்பரப்பின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியம்.  வடமேல் மாகாணம் இன்று கனமழை யைப் பெறும் வாய்ப்புள்ளது. 

மத்திய மற்றும் மேல் மாகாணத்தின் ஒரு சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு வானிலை இன்று படிப்படியாக சீரடையும் என  நாகமுத்து பிரதீபராஜா மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எந்தவொரு வினாத்தாளும் முன்கூட்டியே வெளியாகவில்லை –...

2026-08-14 09:06:01
news-image

இன்றைய வானிலை 

2026-08-14 06:42:08
news-image

ஆபத்தான வாகன ஓட்டம், வீதி விதிமீறல்களை...

2026-08-14 06:40:21
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின்...

2026-08-14 06:44:42
news-image

கொழும்பில் இந்தோனேஷிய கலாசார மண்டபம் திறப்பு

2026-08-14 06:48:31
news-image

தித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை...

2026-08-14 06:24:31
news-image

மெகசின் சிறை வன்முறையில் திட்டமிட்ட தாக்குதல்;...

2026-08-14 06:20:00
news-image

ஜனாதிபதியின் மத நல்லிணக்கத்திற்கு தொல்லியல் திணைக்களம்...

2026-08-14 06:12:16
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்தை பிரதம நீதியரசர்...

2026-08-14 06:07:43
news-image

எதிர்வரும் காலத்தில் கஞ்சிபானை இம்ரான் கைது...

2026-08-14 06:04:13
news-image

'நீதியின் ஓலம் - 2': தமிழினப்படுகொலைக்கு...

2026-08-14 05:57:08
news-image

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா உபகுழுவின்...

2026-08-14 05:54:23