சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 உள்ளூர் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதியிலுள்ள கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட போதே குறித்த 13 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 100 கிலோ கிராம் மீன், 3 பைபர் இழைப் படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் ஆகியன இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் 13 மீனவர்களையும் மேலதி விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.