பராக்ஸிமல் சுப்ராவென்ட்ரிகுலர் டாக்கிகர்டியா எனும் சீரற்ற இதய துடிப்பு பாதிப்பிற்கான சிகிச்சை

28 Nov, 2025 | 05:16 PM
image

எம்மில் சிலருக்கு திடீரென்று இதய துடிப்பில் சம சீரற்ற தன்மை ஏற்படுவதாக உணர்வார்கள். வேறு சிலர் இத்தகைய சம சீரற்ற இதயத் துடிப்பின் காரணமாக மார்பகப் பகுதியில் ஒரு வகையினதான அசௌகரியத்தை உணர்வார்கள். இவை அரித்மியா எனப்படும் சீரற்ற இதயத் துடிப்பு பாதிப்பிற்கான அறிகுறி என்றும் , மருத்துவ மொழியில் பராக்சிமல் சுப்ராவென்ட்ரிகுலர் டாக்கிகர்டியா என்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் வைத்தியர்கள் விவரிப்பார்கள். இதற்கு தற்போது நவீன சிகிச்சை முறைகள் அறிமுகமாகி பலன் அளித்து வருகிறது என்றும் வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மன அழுத்தம், பதட்டம், கோப்பி அருந்துவது,  மது & புகைப்பிடித்தல் , உறக்கமின்மை, நீர்ச்சத்து குறைவு , எம்முடைய உடலுக்கு தேவையான எலெக்ட்ரோலைட் எனப்படும் சத்தில் ஏற்றத்தாழ்வு .. என பல்வேறு காரணங்களால் பராக்ஸிமல் சுப்ரா வென்ட்ரிகுலர் டாக்கிகர்டியா எனும் சீரற்ற இதய துடிப்பு பாதிப்பு ஏற்படுகிறது என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

மேலும் இதய துடிப்பு பாதிப்பு , மூச்சுத்திணறல், மார்பக பகுதியில் அசௌகரியங்கள், தலைச்சுற்றல், குமட்டல்.. ஆகிய அறிகுறிகளையும் இத்தகைய பாதிப்பு வெளிப்படுத்தும்.

அரித்மியா எனப்படும் அசாதாரணமான இதயத்துடிப்பு பாதிப்புகளில் பல வகைகள் உள்ளன. இத்தகைய பாதிப்பு உங்களது இதயத்தின் மேல் பகுதியில் தொடங்குகிறது. மேலும் இத்தகைய பாதிப்பு திடீரென்று தொடங்கி சில நிமிடங்கள் வரை கூட நீடிக்க கூடும். பொதுவாக உயிருக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத இத்தகைய சீரற்ற இதயத்துடிப்பு பாதிப்பிற்கு உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சையும், ஆலோசனையும் பெற வேண்டும்.

இத்தகைய தருணங்களில் வைத்தியர்கள் குருதி பரிசோதனை, இ சி ஜி பரிசோதனை, எக்கோகார்டியோ கிராம், சிடி ஓஞ்சியோகிராம், ஸ்ட்ரஸ் டெஸ்ட் ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். இதனைத் தொடர்ந்து பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மற்றும் மின் தூண்டல் சிகிச்சை ஆகியவற்றை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள்.

வைத்தியர் அசுதோஷ் குமார் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஃபோகல் டிஸ்டோனியா எனும் நரம்பியல் இயக்க...

2026-07-17 16:09:06
news-image

பெம்பிகஸ் வல்காரிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2026-07-15 15:09:00
news-image

விரை வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-14 17:28:48
news-image

கோரொய்ட் பிளெக்ஸஸ் சிஸ்ட் எனும் சிசுவின்...

2026-07-13 17:19:36
news-image

மூட்டுகளை பாதுகாக்கும் நவீன சத்திர சிகிச்சை-...

2026-07-11 17:00:24
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பைலோரிக்ஸ்டெனோசிஸ் பாதிப்புக்குரிய...

2026-07-10 15:17:29
news-image

ஹைட்ராடெனிடிஸ் சுப்புராடிவா எனும் நாட்பட்ட தோல்...

2026-07-09 18:34:05
news-image

ஜெனிகுலர் ஒர்டரி எம்போலைசேஷன் எனும் மூட்டு...

2026-07-08 15:00:48
news-image

செரிப்ரோஸ்பைனல் திரவ ரைனோரியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-07-07 17:15:38
news-image

பிலியரி அட்ரேசியா எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு...

2026-07-06 15:23:11
news-image

ரெட்டினோபிளாஸ்டோமா எனும் அரிய வகை கண்...

2026-07-04 15:11:03
news-image

ஓலெக்ரானன் எலும்பு முறிவுக்கான நவீன சத்திர...

2026-07-03 17:26:41