கொழும்பில் நங்கூரமிட்டுள்ள விக்ராந்த் மற்றும் உதயகிரி ஆகிய கப்பல்களிலிருந்து இலங்கைக்கு நிவாரணங்களை வழங்க ஆரம்பித்தது இந்தியா!

28 Nov, 2025 | 05:01 PM
image

இலங்கையில் தற்போதைய கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக உருவான கடுமையான பாதிப்பு நிலைமையை முன்னிட்டு, இந்திய அரசு அவசர நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படை கப்பல்களான ஐ.என்.எஸ் விக்ராந்த் (INS Vikrant) மற்றும் ஐ.என்.எஸ் உதயகிரி (INS Udaygiri) ஆகியன இலங்கை கடற்படையின் 75 ஆவது நிறைவு ஆண்டை கொண்டாட கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கான நிவாரணப் பொருட்களை இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெய்ஷங்கர் தனது பதிவில், “இலங்கையில் நிலவும் அனர்த்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்தியா உடனடியாக மனிதாபிமான உதவிகளை வழங்க ஆரம்பித்துள்ளது. இரண்டு இந்திய கடற்படை கப்பல்கள் நிவாரணப் பொருட்களுடன் கொழும்பில் தரையிறங்கியுள்ளன,” என குறிப்பிட்டுள்ளார்.

நிவாரணப் பொருட்களில் உணவுப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், அவசர மீட்பு உபகரணங்கள், குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகள் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகளை சமாளிக்க இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான பாரம்பரிய நட்புறவை மீண்டும் வலுப்படுத்தும் விதமாக இந்தியாவின் இந்த அவசர உதவி முக்கியத்துவம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையினால் தமது அன்புக்குரியவர்களை இழந்திருக்கும் குடும்பங்களுக்கு அனுதாபத்தை வெளிப்படுத்தியிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 'சாகர் பந்து' திட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் மற்றும் அவசியமான மனிதாபிமான உதவிகள், அனர்த்த நிவாரணங்களை உடனடியாக அனுப்பிவைத்திருப்பதாக அறிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் விளைவாக பலர் உயிரிழந்திருப்பதுடன், பெருமளவான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. நாடளாவிய ரீதியில் தொடர்ந்து மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டோருக்கான அனுதாபத்தையும், இக்கடினமான சூழ்நிலையில் இந்தியாவின் உடன்நிற்பையும் வெளிப்படுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவரது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

'டித்வா சூறாவளி காரணமாக தமது அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் இலங்கை மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரித்துக்கொள்கிறேன். அத்தோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் துரித மீட்சிக்காகப் பிரார்த்திக்கிறேன்' என அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை 'எமது மிகநெருங்கிய அயல்நாட்டுடனான உடன்நிற்பை வெளிப்படுத்தும் வகையில் 'சாகர் பந்து' திட்டத்தின்கீழ் நிவாரணப்பொருட்கள் மற்றும் அவசியமான மனிதாபிமான உதவிகள், அனர்த்த நிவாரணங்களை இந்தியா உடனடியாக அனுப்பிவைத்துள்ளது. இந்நிலைவரம் தீவிரமடையும் பட்சத்தில் அவசியமான மேலதிக உதவிகளையும், ஒத்துழைப்பையும் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறோம்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 'அயலகத்துக்கு முதலிடம் மற்றும் 'விஷன் மகாசாகர்' ஆகிய கொள்கைகளின் பிரகாரம் மிக அவசியமான இத்தருணத்தில் இலங்கையுடன் இந்தியா உடன்நிற்கும் எனவும் பிரதமர் மோடி அப்பதிவில் உறுதியளித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயரப்புலம் வீதி புனரமைக்கப்படாததால் நான்கு உயிர்கள்...

2026-01-24 03:49:09
news-image

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடைபெறும்...

2026-01-24 03:44:52
news-image

கிவுல்ஓயா திட்டம் சிங்கள குடியேற்றத்தை இலக்காக...

2026-01-24 03:40:49
news-image

மட்டக்களப்பு கிரான் பகுதியில் மகாவலி காணிகள்...

2026-01-24 03:33:47
news-image

முக்கிய துறைகள் அரசியலாக்கம்: கல்வி மறுசீரமைப்பில்...

2026-01-23 15:34:11
news-image

மலையக பயிற்சி நிலையங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர்கள்...

2026-01-23 16:05:35
news-image

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனம் பாதுகாக்கப்படும்...

2026-01-23 16:49:20
news-image

நோயாளிகளை பணயம் வைத்து போராடுவது நியாயமற்றது...

2026-01-23 16:21:33
news-image

அரசியலமைப்பு பேரவையின் சிவில் உறுப்பினர்களாக மூவர்...

2026-01-23 21:19:02
news-image

முன்னாள் தலைவர்களை சாபம் என்று பேசுவது...

2026-01-23 17:20:48
news-image

தமிழர்களின் தங்க நகை வழங்கலுக்கு வலியுறுத்தல்...

2026-01-23 17:11:53
news-image

சட்டமா அதிபர் விமர்சனங்கள் குறித்து நீதி...

2026-01-23 16:53:13