கிளினிக்குகளில் மருந்துகளைப் பெறுபவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு நடவடிக்கை ; நளிந்த ஜயதிஸ்ஸ

28 Nov, 2025 | 04:01 PM
image

(எம்.மனோசித்ரா)

வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளமையால் தற்காலிக பாதுகாப்பு முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான அடிப்படை சுகாதார மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கிளினிக்குகளில் மருந்துகளைப் பெறுபவர்களுக்கு, அவற்றை வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்த நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு  வெள்ளிக்கிழமை (28)  பத்தரமுல்லையிலுள்ள இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்காலிக பாதுகாப்பு முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான அடிப்படை சுகாதார மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர்கள் ஊடாகவும், மருத்துவ அதிகாரிகள் ஊடாகவும் அந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. இராணுவம் உள்ளிட்ட முப்படைகளும் இந்த சேவைகளில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கிளினிக்குகளில் மருந்துகளைப் பெறுபவர்களுக்கு, அவற்றை வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச பொறிமுறையின் ஊடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. சில வைத்தியசாலைகளிலும் இந்த அனர்த்த நிலைமைகள் தாக்கம் செலுத்தியுள்ளன.

தெதுருஓயாவில் நீர் மட்டம் உயர்வடைந்தமையால் சிலாபம் மாவட்ட வைத்தியசாலையிலிருந்தவர்களை அங்கிருந்து முற்றாக அகற்றுவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டது. எனினும் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் நோயாளர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படவில்லை.

எவ்வாறிருப்பினும் குறித்த வைத்தியசாலையிலுள்ள சுமார் 260 நோயாளர்களை மாரவில மற்றும் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும் நிலைமை கட்டுப்படுத்தபட்டுள்ளமையால் அதே வைத்தியசாலையில் மேல் மாடியில் நோயாளர்கள் பராமறிக்கப்படுகின்றனர். தேவையேற்படின் அவர்களை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதற்கான போக்குவரத்து சேவைகள் தயார் நிலையிலுள்ளன.

இதே போன்று மஹியங்கனை ஆதார வைத்தியசாலையிலும் அனர்த்த நிலைமை ஏற்பட்டிருந்தது. குறித்த வைத்தியசாலையிலும் மேல் மாடி பயன்படுத்தப்பட்டு நோயாளர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மஹியங்கனையை அண்மிக்கும் வீதிகள் பல சேதமடைந்துள்ளன. எனினும் வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் எவ்வித சிக்கலும் இல்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தாரில் இறந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு ரூ....

2026-01-24 05:23:07
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு DFCC...

2026-01-24 05:15:26
news-image

புதிய கல்வி மறுசீரமைப்பில் வெளிப்படையான கலந்துரையாடல்...

2026-01-24 05:08:57
news-image

ஜனாதிபதி வாயால் வடை சுடாமல் பாதிக்கப்பட்ட...

2026-01-24 04:55:00
news-image

பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள...

2026-01-24 05:02:18
news-image

22 நாட்களில் 135 வீதி விபத்துக்கள்...

2026-01-24 04:32:31
news-image

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை எப்போதும் விமர்சிப்பேன்...

2026-01-24 04:31:10
news-image

சட்டமா அதிபரின் சுயாதீனத்தை அரசாங்கம் உறுதிப்படுத்த...

2026-01-24 04:29:10
news-image

ஜனாதிபதியின் உரையை எதிர்க்கட்சியினர் திரிபுப்படுத்தியுள்ளார்கள் -...

2026-01-24 04:19:18
news-image

யாழில். வீட்டு கழிவு நீரை வெள்ள...

2026-01-24 03:59:46
news-image

உயரப்புலம் வீதி புனரமைக்கப்படாததால் நான்கு உயிர்கள்...

2026-01-24 03:49:09
news-image

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடைபெறும்...

2026-01-24 03:44:52