சீரற்ற வானிலை ; நாவலப்பிட்டியில் இதுவரை ஐந்து பேர் உயிரிழப்பு - 50 குடும்பங்கள் இடம்பெயர்வு!

28 Nov, 2025 | 03:16 PM
image

நாவலப்பிட்டி பழைய ரயில் பாதைக்கு அருகில் அமைந்திருந்த ஒரு வீட்டின் மீது வெள்ளிக்கிழமை (28) ஆம் திகதி காலை ஏற்பட்ட மண் சரிவில், அந்த வீட்டில் வசித்த இரு பெண்களும் மற்றும் மூன்று மாதச் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழையால் அந்த வீட்டின் பின் பகுதியில் இருந்த மண்மேடு இடிந்து வீடு முழுவதையும் மூடி புதைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த கிராம மக்கள் மற்றும் நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் இணைந்து குறித்த நபர்களை மீட்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் மூவரையும் காப்பாற்ற முடியவில்லை.

உயிரிழந்தோரின் உடல்கள் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

நாவலப்பிட்டி பிரதேசத்தில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 50 குடும்பங்கள் பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு இடம்பெயர்த்துள்ளதாக பிரதேச செயலாளர் ரம்யா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் மீது...

2026-09-15 04:55:46
news-image

முல்லைத்தீவில் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 17,469.58 ஹெக்டேயர்...

2026-09-15 00:03:48
news-image

வலி.வடக்கில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள்: மீள...

2026-09-15 00:00:04
news-image

மாகாணசபைத் தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சி...

2026-09-14 12:54:25
news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு:...

2026-09-14 16:55:48
news-image

இலங்கை மக்களின் உயிரியளவியல் தரவுகளை இந்தியாவுக்கு...

2026-09-14 13:54:26
news-image

சிறைச்சாலை நாமலுக்கு புதிதல்ல; எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய...

2026-09-14 16:57:09
news-image

தெஹிவளையில் சிறுவர்கள் உயிரிழப்புக்கு ஐ.நா கடும்...

2026-09-14 13:56:05
news-image

ஊழல்வாதிகளுடன் ஒப்பிட்டு நெல்சன் மண்டேலாவை அவமதிக்க...

2026-09-14 13:57:00
news-image

வறட்சி நிலை: யால, குமண பூங்காக்கள்...

2026-09-14 15:17:18
news-image

யூரியா உரக் கொள்வனவில் ரூ.1,867 மில்லியன்...

2026-09-14 15:27:52
news-image

மக்கள் பங்கேற்புடன் வெளிப்படையான புதிய அரசியல்...

2026-09-14 15:45:54