அனர்த்தம் குறித்து விடுக்கப்படும் அறிவுறுத்தல்கள் தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் ; சஜித் பிரேமதாச

28 Nov, 2025 | 02:06 PM
image

( இராஜதுரை ஹஷான்)

மழையுடனான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும், இடர் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கும் மேலதிகமாக  நிதி ஒதுக்க அரசாங்கம் குறைநிரப்பு  பிரேரணையை கொண்டு வந்தால் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அனர்த்தம் குறித்து விடுக்கப்படும் அறிவுறுத்தல்கள்  தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும்,அலட்சியமாக செயற்பட கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  நாட்டு மக்களிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற அமர்வின் போது நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையில் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போனோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பற்கு பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தற்போதைய இடர் நிலைமை குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் வானிலை ஆராய்ச்சி மையம் விடுக்கும் அறிவுறுத்தல்கள் தொடர்பில் பொதுமக்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும். அலட்சியமாக செயற்பட கூடாது.அரச அதிகாரிகள் விடுக்கும் அறிவுறுத்தலுக்கு அமைய செயற்பட வேண்டும்.

மழையுடனான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும், இடர் முகாமைத்துவ நடவ டிக்கைகளுக்கும் மேலதிகமாக  நிதி ஒதுக்க அரசாங்கம் குறைநிரப்பு  பிரேரணையை கொண்டு வந்தால் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

தற்போதைய நெருக்கடியான நிலையில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இடர் நிலையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எடுக்கும்  நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்குப் போர்ச் சூழலால் வலுசக்தி...

2026-03-15 19:54:34
news-image

எரிபொருள் 'கியூ.ஆர்' முறைமை மீண்டும் அறிமுகம்:...

2026-03-15 17:46:05
news-image

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா...

2026-03-15 17:45:11
news-image

ஈரானின் 'குழப்பமான' வெளிவிவகார கொள்கை: ஐக்கிய...

2026-03-15 17:37:26
news-image

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம்...

2026-03-15 17:29:30
news-image

இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் தாமதமாகவே செய்து...

2026-03-15 17:28:58
news-image

சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர்...

2026-03-15 17:27:41
news-image

மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில்...

2026-03-15 17:23:14
news-image

புதிய வாகனங்களுக்கான கியூ.ஆர் குறியீட்டுப் பதிவு...

2026-03-15 16:17:59
news-image

மலையக பெருந்தோட்ட பகுதியில் புதிய வாக்காளரை...

2026-03-15 16:00:41
news-image

சுகாதார அமைச்சர் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு...

2026-03-15 15:37:09
news-image

காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு...

2026-03-15 15:31:52