நாட்டில் தொடர்ச்சியாக நீடிக்கும் மோசமான வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து புதிய நிலைவரத்தை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ளது.
தற்போதைய பாதிப்பு நிலைவரங்களின் படி, நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் 285 பிரதேச செயலகப் பிரிவுகளில் 44,192 குடும்பங்களைச் சேர்ந்த 148,603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தற்போது 195 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, 5,024 குடும்பங்களைச் சேர்ந்த 14,766 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 42 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 2, 810 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
முழுமையாக சேதமடைந்த வீடுகளை மீளமைக்க தலா ரூ. 2.5 மில்லியன் (25 இலட்சம்) ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான உதவி, சேதநிலைக்கேற்ப வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரணம் மற்றும் மதிப்பீட்டு பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM