கடும் மழை காரணமாக பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல எட்டம்பிட்டிய திக்வெல்ல தோட்டம் கீழ்பிரிவில் ஏற்பட்ட திடீர் மண்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் மீட்புப்பிரிவு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மண்சரிவு ஏற்பட்ட நிலையில், குறித்த பகுதிக்கு உடனடியாக இராணுவம் மற்றும் மீட்புக்குழுக்கள் சம்பவ இடத்துக்கு சென்று தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் கடுமையான வானிலை காரணமாக சவாலாக இருந்தாலும், அதிகாரிகள் தொடர்ந்து முழு திறனுடன் செயல்பட்டு வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் கடும் மழையுடனான சீரற்ற வானிலை நிலவுவதால் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அதிகாரிகள் வழங்கும் எச்சரிக்கைகளைக் கவனமாகப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM