மண்சரிவு காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு!

28 Nov, 2025 | 10:12 AM
image

மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் ஹட்டன் குடாகம மற்றும் கொட்டகலை பகுதிகளில் பல இடங்களில் பாரிய அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. 

இதன் விளைவாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் வாகனப் போக்குவரத்து வெள்ளிக்கிழமை (28)அதிகாலை முதல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதேசத்தில் பெய்து வரும் இடைவிடாத மழை காரணமாக மண்மேடுகள், கற்கள், மரக்கிளைகள் உள்ளிட்டவை பிரதான வீதிக்கு சரிந்து விழுந்துள்ளன. 

இதனால் வீதி முழுவதும் மண் மற்றும் கற்கள் குவிந்துள்ள நிலையில், போக்குவரத்தை சீராக செயல்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

மண் சரிவுகளை அகற்றும் பணிகள் அவசரகாலத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வந்தாலும், மழை மேலும் அதிகரித்து வருவதால் இந்தப் பணிகள் எதிர்பார்த்த அளவில் முன்னேற முடியாமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் இணைந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர். மழை குறையும் வரை பொதுமக்கள் மற்றும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடந்த அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்தைப் போன்றே இவ்...

2026-09-12 16:17:21
news-image

முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மானம்பேரி...

2026-09-12 16:16:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு...

2026-09-12 16:01:07
news-image

மத்தள விமான நிலையத்தில் மான் வேட்டை:...

2026-09-12 15:45:08
news-image

தெஹிவளை கைகுண்டுத் தாக்குதல்: இலக்கு மாறியதால்...

2026-09-12 15:38:43
news-image

வீடு புகுந்து திருட்டு மற்றும் குற்றச்...

2026-09-12 15:16:55
news-image

26 நகரங்களை அபிவிருத்தி செய்ய 65...

2026-09-12 14:49:30
news-image

நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு...

2026-09-12 15:13:56
news-image

தனமல்விலவில் 114 கிலோவிற்கும் அதிக கஞ்சாவுடன்...

2026-09-12 15:11:22
news-image

தனமல்வில வீதி விபத்து: நான்கு இளைஞர்கள்...

2026-09-12 14:48:44
news-image

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களின் ‘ஸ்மார்ட் சாவிகள்’...

2026-09-12 14:56:17
news-image

சட்டவிரோத மீன்பிடி: இலங்கை கடற்படையினரின் விசேட...

2026-09-12 14:48:21