வெளியானது புதிய வானிலை எச்சரிக்கை !!

27 Nov, 2025 | 11:56 PM
image

நாடெங்கும் கடுமையான மழை மற்றும் வலுவான காற்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நிலவும் வானிலை அமைப்பின் தாக்கத்தினால், அடுத்த சில நாட்கள் நாடெங்கும் இடைவிடாமல் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் மேலான மிக கனமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கொழும்பு மற்றும் பதுளை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் மேலான கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

பொதுமக்கள் கடலோர பகுதிகளில், வெள்ள அபாயமுள்ள இடங்களில் மற்றும் மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பல ஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்து சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

* மகாவலி கங்கை

* தெதுரு ஓயா

* மகா ஓயா

* கலா ஓயா

* மாணிக்க கங்கை 

* மல்வத்து ஓயா

இடைவிடாது பெய்யும் மழையினால் மேற்குறிப்பிட்ட ஆறுகளின் நீர்மட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆறுகளுக்கருகே வசிக்கும் மக்கள் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும்  எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து;...

2026-04-12 08:45:28
news-image

கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-04-12 08:21:17
news-image

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

2026-04-12 07:48:35
news-image

நபர் ஒருவர் கொலை: சந்தேகநபர் கைது!

2026-04-12 07:38:37
news-image

பூஸா சிறைச்சாலையிலிருந்த 07 முக்கிய பாதாள...

2026-04-12 07:19:46
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்த விசாரணை:...

2026-04-12 06:28:35
news-image

இன்றைய வானிலை : சூரியன் உச்சம்...

2026-04-12 06:23:51
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு...

2026-04-11 17:27:25
news-image

மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களால் இலங்கைக்கு...

2026-04-11 17:08:17
news-image

தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

2026-04-11 17:35:29
news-image

மேற்காசியாவில் தற்காலிக போர்நிறுத்தம் : இலங்கை...

2026-04-11 15:36:16
news-image

உரம் குறித்து விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லை...

2026-04-11 14:59:19