(நெவில் அன்தனி)
ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமை (29) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்தாட இலங்கை தகுதி பெற்றுக்கொண்டது.
பாகிஸ்தானுக்கு எதிராக இன்று வியாழக்கிழமை (27) நடைபெற்ற கடைசி இரண்டாம் கட்ட லீக் போட்டியில் 6 ஓட்டங்களால் இலங்கை மிகவும் இறுக்கமான வெற்றியை ஈட்டியதன் மூலமே இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
காமில் மிஷார குவித்த அபார அரைச் சதமும் துஷ்மன்த சமீரவின் 4 விக்கெட் குவியலும் இலங்கையின் வெற்றியில் பிரதான பங்காற்றின.
இந்தப் போட்டி முடிவை அடுத்து இறுதிக்கு போகலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ஸிம்பாப்வே அணியினர் தமது சொந்த நாட்டுக்கு திரும்ப தயாராகின்றனர்.
சற்று கடினமான ஆனால் எட்டக்கூடிய 185 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இந்த மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அடைந்த முதலாவது தோல்வி இதுவாகும்.
மிகத் துல்லியமாக பந்துவீசிய துஷ்மன்த சமீர தனது முதல் இரண்டு ஒவர்களில் 3 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தி பலம்வாய்ந்து பாகிஸ்தான் துடுப்பாட்ட வரிசையை திக்குமுக்காடச் செய்தார்.
இதன் கராணமாக பவர் ப்ளே நிறைவில் பாகிஸ்தான் 4 விக்கெட்களை இழந்து 45 ஓட்டங்களைப் பெற்று தடுமாறியது.
பாகிஸ்தானின் முன்வரிசையில் சய்ம் அயூப் மாத்திரம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 27 ஓட்டங்களைப் பெற்றார்.
சாஹிப்ஸதா பர்ஹான் (9), பாபர் அஸாம் (0), பக்கார் ஸமான் (1) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.
எவ்வாறாயினும் அணித் தலைவர் சல்மான் அகா, உஸ்மான் கான் ஆகிய இருவரும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கட்டி எழுப்ப முயற்சித்த போது உஸ்மான் கான் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து அணித் தலைவர் சல்மான் அகா தனித்து போராடி அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து இலங்கை பந்துவீச்சாளர்களை சிதறடித்தார்.
அவரும் மொஹமத் நவாஸம் 6ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் மொத்த எண்ணிக்கையை அண்மிக்கச் செய்தனர்.
திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மொஹம்மத் வசிம் 27 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது 19ஆவது ஓவரில் ஏஷான் மாலிங்கவினால் ஆட்டம் இழக்கச் செய்யப்பட்டார்.
கடைசி ஒவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 10 ஓட்டங்கள் தெவைப்பட்டது. அந்த ஒவரை மிகவும் நேர்த்தியாக வீசிய துஷ்மன்த சமீர 3 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து இலங்கையை வெற்றி அடையச் செய்தார்.
சல்மான் அகா 44 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 63 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் துஷ்மன்த சமீர 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஏஷான் மாலிங்க 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களைக் குவித்தது.
இளம் ஆரம்ப வீரர் காமில் மிஷார அனுபவசாலிபோல் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 48 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 76 ஓட்டங்களைப் பெற்றார்.
12ஆவது சர்வதேச ரி20 போட்டியில் விளையாடும் அவர் இந்த வகை கிரிக்கெட்டில் பதிவுசெய்த அவரது தனிப்பட்ட அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.
மொத்த எண்ணிக்கை 16 ஓட்டங்களாக இருந்தபோது பெத்தும் நிஸ்ஸன்க 8 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
ஆனால், காமில் மிஷாரவும் குசல் மெண்டிஸும் 2ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
குசல் மெண்டிஸ் 23 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து குசல் பெரேரா 6 ஓட்டங்களை மட்டும் பெற்று வெளியேறினார்.
இதனை அடுத்து காமில் மிஷாரவும் ஜனித் லியனகேவும் 4ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர்.
மொத்த எண்ணிக்கை 153 ஓட்டங்களாக இருந்தபோது காமில் மிஷார களம் விட்டகன்றார்.
அதன் பின்னர் ஜனித் லியனகேவும் அணித் தலைவர் தசுன் ஷானக்கவும் 5ஆவது விக்கெட்டில் 31 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 184 ஓட்டங்களாக உயர்த்தினர்.
ஜனித் லியனகே 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். தசுன் ஷானக்க 17 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் அப்ரார் அஹ்மத் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM